வீடு / சமையல் குறிப்பு / வெந்தயப்பொடி சாதம்

Photo of Vendaya podi Sadam by Krishnasamy Vidya Valli at BetterButter
737
0
0.0(0)
0

வெந்தயப்பொடி சாதம்

Nov-16-2018
Krishnasamy Vidya Valli
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வெந்தயப்பொடி சாதம் செய்முறை பற்றி

எளிமையான பழமையான ஆரோக்யமான ரைஸ் வெரைட்டி இது. என் அம்மாவின் கைபக்குவத்தில் செய்துள்ளேன். வாரம் ஒரு முறையாவது கண்டிப்பாக சாப்பிட வேண்டும். உடலுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு கரண்டி வெந்தயபொடி சாதம் சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சாதம் 1 கப்
  2. உப்பு 1/2 தேக்கரண்டி
  3. மணத்தக்காளி வத்தல் 1 மேஜைக்கரண்டி
  4. வறுத்து பொடி செய்ய
  5. வெந்தயம் 1 தேக்கரண்டி
  6. உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
  7. மிளகு 1/2 தேக்கரண்டி
  8. சீரகம் 1/2 தேக்கரண்டி
  9. கட்டிப்பெருங்காயம் 1 சிறிய துண்டு
  10. தாளிக்க
  11. நெய் 1 தேக்கரண்டி
  12. கடுகு உளுத்தம்பருப்பு தலா 1/2 தேக்கரண்டி
  13. கருவேப்பிலை 2 ஆர்க்கு
  14. பெருங்காயம் 2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. வறுக்க கொடுத்தவற்றை வறுத்துக் கொள்ளவும்
  2. உப்பு சேர்த்து மிக்ஸியில் திரிக்கவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து மணத்தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. திரித்த பொடி சேர்த்து கிளறவும்
  5. சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்
  6. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. தயிர் உடன் சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்