வீடு / சமையல் குறிப்பு / சத்து மாவு/நெல்லுமாவு/வறுத்தமாவு

Photo of Sathumavu/nellumavu/varuthamavu by Krishnasamy Vidya Valli at BetterButter
256
1
0.0(0)
0

சத்து மாவு/நெல்லுமாவு/வறுத்தமாவு

Nov-17-2018
Krishnasamy Vidya Valli
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சத்து மாவு/நெல்லுமாவு/வறுத்தமாவு செய்முறை பற்றி

இது மிகவும் பழமையான ரெசிபி. உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் போன்று செய்து கொடுக்கலாம். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரில் அழைப்பார்கள். பெயர் காரணம் தெரியவில்லை. ஏகாதேசி போன்ற விரத நாட்களில் இதை சாப்பிடுவார்கள். இதை கோதுமை அல்வாவின் தங்கச்சின்னு கூட சொல்லலாம். அல்வாவிற்கு நெய் அதிகம் தேவைப்படும். ஆனால் இதற்கு நெய் அதிகம் தேவையில்லை. என் இரு வீட்டு பாட்டிகளும் அந்த காலத்தில் வாரம் ஒருமுறையேனும் செய்வார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.இருபது நிமிடங்களில் அருமையான ஆரோக்யமான இனிப்பு இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு அரை கப்
  2. பால் 3/4 கப்
  3. சீனி 1/4 கப்+1/8 கப்
  4. நெய் 5 தேக்கரண்டி
  5. விருப்பப்பட்டால் அலங்கரிக்க முந்திரி

வழிமுறைகள்

  1. கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு கோதுமை மாவை நல்ல பிரவுன் கலர் வரும்வரை வறுக்கவும்
  2. பாலில் சீனியை கரையவிட்டுக்கொள்ளவும்
  3. நல்ல பிரவுன் நிறம் வந்தவுடன் பால் சீனி கலவையை விட்டு கிளறவும்
  4. சிறு சிறு இடைவெளியில் நெய் விட்டு கிளறி ஒட்டாமல் வரும் நிலையில் இறக்கவும்
  5. விருப்பப்பட்டால் முந்திரி அலங்கரித்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்