வீடு / சமையல் குறிப்பு / வேர்கடலை குடைமிளகாய் தோசை

Photo of Peanut capsicum dosai by Krishnasamy Vidya Valli at BetterButter
168
0
0.0(0)
0

வேர்கடலை குடைமிளகாய் தோசை

Nov-18-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வேர்கடலை குடைமிளகாய் தோசை செய்முறை பற்றி

எப்போதும் ஒரே போல தோசை செய்வதிலிருந்து ஒரு மாற்று. உடனடியாகவும் எளிதிலும் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வறுத்த வேர்கடலை தோல் நீக்கியது 1/4 கப்
  2. அரிசி மாவு கடலைமாவு தலா 1/8 கப்
  3. ரவை 1 மேஜைக்கரண்டி
  4. தயிர் 1/8 கப்
  5. உப்பு 1/4 தேக்கரண்டி
  6. பச்ச மிளகாய் 1 அல்லது 2
  7. பெருங்காயம் 1/8 தேக்கரண்டி
  8. குடைமிளகாய் பொடியாக நறுக்கியது 1/4 கப்
  9. சாட் மசாலா 2 தேக்கரண்டி
  10. தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. வேர்க்கடலை அரிசி மாவு கடலை மாவு ரவை உப்பு பச்ச மிளகாய் பெருங்காயம் தயிர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  2. தோசைக் கல்லில் எண்ணெய் தடவி மாவை விட்டு குடைமிளகாய் மற்றும் சாட் மசாலாவை டாப்பிங்ஸ் போல தூவவும்
  3. ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு வேக விடவும்
  4. சுடாக சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்