வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் ஜீரா பெப்பர் ரைஸ்

Photo of Vegetable jeera pepper rice by Krishnasamy Vidya Valli at BetterButter
626
0
0.0(0)
0

வெஜிடபிள் ஜீரா பெப்பர் ரைஸ்

Nov-18-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் ஜீரா பெப்பர் ரைஸ் செய்முறை பற்றி

சிம்பிளான ஒன்பாட் மீல் இது. மைல்டான நோ ஆனியன் நோ கார்லிக் ரெசிபியாக செய்துள்ளேன். தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. சாஸ் அல்லது தயிர் சாலட் உடன் சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பாஸ்மதி அரிசி 1/2 கப்
  2. கேரட் குடைமிளகாய் உருளைக்கிழங்கு நறுக்கியது 1/2 கப்
  3. உப்பு 1/2 தேக்கரண்டி
  4. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  5. தாளிக்க
  6. நெய் 2 தேக்கரண்டி
  7. சீரகம் 1 தேக்கரண்டி
  8. மிளகு 1/2 தேக்கரண்டி (ஒன்று இரண்டாக தட்டிக்கொள்ளவும்)
  9. பட்டை ஏலக்காய் கிராம்பு தலா 2
  10. பச்ச மிளகாய் நீளவாக்கில் நறுக்கியது 2

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை காய்கள் நறுக்கி வதக்கும்வரை வெந்நீரில் ஊறவைக்கவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து காய்கள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்
  3. ஊறவைத்த அரிசியை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்
  4. ஒரு கப் தண்ணீர் விட்டு அப்படியே மூடி வேகவிடலாம்
  5. அல்லது ரைஸ்குக்கரிலும் வைக்கலாம்
  6. பாதி வெந்ததும் உப்பு சேர்த்து கலக்கவும்
  7. சாதம் வெந்ததும் இறக்கி கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்