BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / நட்ஸ் மற்றும் பீட்ருட் சாண்ட்விச்

Photo of Nuts and beetroot sandwich by Sowmya Sundar at BetterButter
0
0
0(0)
0

நட்ஸ் மற்றும் பீட்ருட் சாண்ட்விச்

Nov-19-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நட்ஸ் மற்றும் பீட்ருட் சாண்ட்விச் செய்முறை பற்றி

பதினைந்தே நிமிடங்களில் செய்யக்கூடிய சத்தான சாண்ட்விச் இது.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • భారతీయ
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • మితముగా వేయించుట
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீட்ரூட் துருவல் 1 கப்
  2. பிரட் துண்டுகள் 8
  3. எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
  4. வெங்காயம் 1 நறுக்கியது
  5. மிளகாய் தூள்,மல்லி தூள், மிளகு தூள், கரம் மசாலா பொடி தலா அரை டீஸ்பூன்
  6. சீரக பொடி, ஆம்சூர் பொடி 1/4 டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. முந்திரி , பாதாம் பருப்பு தலா 6
  9. வெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்
  2. பின் அதனுடன் பீட்ரூட் துருவல் மற்றும் எல்லா பொடி வகைகள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வதக்கி இறக்கவும். அதிகம் வதக்க தேவையில்லை.
  3. முந்திரி பாதாமை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். விரும்பினால் வேர்க்கடலையும் சேர்க்கலாம். குறிப்பு: நான் தோல் நீக்கிய பாதாம் உபயோகித்துள்ளேன். தோலுடன் நறுக்கியும் சேர்க்கலாம்
  4. பிரட்டில் வெண்ணெய் தடவி பீட்ரூட் மசாலாவை வைத்து அதன் மேல் நட்ஸை தூவவும்.
  5. பின் மற்றொரு வெண்ணெய் தடவிய பிரட்டால் மூடி கல்லில் இரண்டு பக்கமும் தலா ஒரு நிமிஷம் டோஸ்ட் செய்து கொள்ளவும்.ஒரே சமயத்தில் இரண்டு செட் வரை தவாவில் வைக்கலாம்.
  6. கிரன்சி நட்டி பீட்ரூட் சாண்ட்விச் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்