வீடு / சமையல் குறிப்பு / பெங்காலி கோளி கறி பிரியாணி ,வெங்காய முட்டை கிரேவி மற்றும் தயிர் பச்சடி.

Photo of Bengali Chicken Biriyani,Onion Egg Gravy and Onion Raita by Jayanthy Asokan at BetterButter
581
1
0.0(0)
0

பெங்காலி கோளி கறி பிரியாணி ,வெங்காய முட்டை கிரேவி மற்றும் தயிர் பச்சடி.

Nov-19-2018
Jayanthy Asokan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பெங்காலி கோளி கறி பிரியாணி ,வெங்காய முட்டை கிரேவி மற்றும் தயிர் பச்சடி. செய்முறை பற்றி

பெங்காலி பிரியாணி நாம் செய்யும் பிரியாணியை விட சற்று வித்தியாசமாக இருக்கும் . இதில் உருளைக்கிழங்கை நன்கு ஊறவைத்து சிக்கனுடன் சேர்த்து பதமாக பிரஷர் குக்கரில் வேக வைத்து செய்ய வேண்டும். அதேபோல் வெங்காயம் முட்டை கிரேவி சுலபமாக குக்கரில் சில நிமிடங்களில் செய்து பிரியாணியுடன் பறிமாறலாம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • மேற்கு வங்காளம்
  • சிம்மெரிங்
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சீரக சம்பா அரிசி 1/4 கிலோ
  2. கோழிக்கறி 1/2 கிலோ
  3. உருளைக்கிழங்கு 3
  4. நெய் 4 மேஜைக்கரண்டி
  5. பெரிய வெங்காயம் 2
  6. இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
  7. காஷ்மீரி மிளகாய் பொடி 1/2 தேக்கரண்டி
  8. மிளகாய்ப்பொடி 1 தேக்கரண்டி
  9. மஞ்சள் பொடி 1/4 தேக்கரண்டி
  10. சீரகப் பொடி 1/4 தேக்கரண்டி
  11. தயிர் 1/2 கப்
  12. ஏலக்காய் 4
  13. பட்டை 1 இன்ச்
  14. கிராம்பு 4
  15. கடல்பாசி சிறு துண்டு
  16. புதினா 2 கைப்பிடி
  17. எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
  18. உப்பு தேவைக்கு ஏற்ப
  19. வெங்காயம் முட்டை கிரேவி செய்ய தேவையான பொருட்கள்
  20. முட்டை-3
  21. பெரிய வெங்காயம் 2
  22. தக்காளி 1
  23. இஞ்சி பூண்டு விழுது 1/4 தேக்கரண்டி
  24. மிளகு 1/2 தேக்கரண்டி
  25. மிளகாய் பொடி 1/2 தேக்கரண்டி
  26. முந்திரி 5
  27. சீரகம் 1/2 தேக்கரண்டி
  28. உப்பு தேவைக்கேற்ப
  29. தயிர் பச்சடி செய்வதற்கு தேவையான பொருட்கள்
  30. பெரிய வெங்காயம் 1
  31. தக்காளி 1
  32. சீரகப் பொடி சிறிதளவு
  33. உப்பு தேவைக்கு ஏற்ப
  34. கொத்துமல்லி சிறிது

வழிமுறைகள்

  1. அரிசியைக் கழுவி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  2. ஒரு பாத்திரத்தில் மிளகாய் பொடி ,காஷ்மீரி மிளகாய் பொடி, சீரகப் பொடி ,மஞ்சள் பொடி மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  3. கலவியில் வெட்டி வைத்த உருளைக் கிழங்கையும் கோழிக்கறி கறி ,புதினா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசறி வைக்க வேண்டும்.
  4. ஒரு பிரஷர் குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு இடித்து வைத்த கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.
  5. பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
  6. கோளி கறி கலவையை அதில் போட்டு நன்கு கிளற வேண்டும்.
  7. கோழிக்கறி நிறம் மாறியதும் அரிசியை அதில் போட்டு நன்கு கிளற வேண்டும்.
  8. பின் தேவைக்கேற்ப தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைக்க வேண்டும்.
  9. இரண்டு விசில் வந்தபின் குறைந்த தணலில் ஐந்து நிமிடம் வைத்து பின் இறக்கி விட வேண்டும்.
  10. வெங்காயம் முட்டை கிரேவி செய்ய.
  11. முட்டையை தண்ணீரில் வேக வைக்க வேண்டும்.
  12. பின் சொன்ன அனைத்து பொருட்களையும் சிறிது எண்ணை விட்டு வானொலியில் இரண்டு நிமிடம் வதக்க வேண்டும்.
  13. வதக்கிய அனைத்து பொருட்களையும் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  14. ஒரு சிறிய பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு அரைத்த கலவையை சேர்க்க வேண்டும்.
  15. இரண்டு நிமிடம் வதக்கிய பின் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வைத்து இறக்க வேண்டும்.
  16. வெந்த இக்கலவையில் முட்டையை உரித்து இதில் கலந்து எண்ணெய் மேலே பிரியும் வரை வைக்க வேண்டும். இதற்கு ஒரு ஐந்து நிமிடம் தேவைப்படும்.
  17. இரண்டு பிரஷர் குக்கரில் செய்வதால் இதற்கு 30 நிமிடங்களே போதுமானது.
  18. தயிரில் வெட்டி வைத்த வெங்காயம் மற்றும் உப்பு தக்காளி சேர்த்து பச்சடி செய்து கொள்ளலாம்.
  19. சுவையான பெங்காலி சிக்கன் பிரியாணி மற்றும் வெங்காயம் முட்டை கிரேவி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்