ஆவ் எனது பிரஷர் குக்கர் கேக் | Awwww my pressure cooker cake in Tamil

எழுதியவர் Rina Khanchandani  |  26th Aug 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Awwww my pressure cooker cake by Rina Khanchandani at BetterButter
ஆவ் எனது பிரஷர் குக்கர் கேக்Rina Khanchandani
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  45

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  8

  மக்கள்

967

0

ஆவ் எனது பிரஷர் குக்கர் கேக்

ஆவ் எனது பிரஷர் குக்கர் கேக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Awwww my pressure cooker cake in Tamil )

 • 250 கிராம் மைதா
 • 200 கிராம் பழுப்புச் சர்க்கரை
 • 1/2 கப் எண்ணெய்/வெண்ணெய்
 • 1/2 கப் பால் பவுடர்
 • 2 ஏலக்காய் (விதைகள் மட்டும்)
 • 1 தேக்கரண்டி வெண்ணிலா கூழ் தூள்
 • 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
 • 1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா
 • எள்ளும் வறுத்த முந்திரியும்
 • 2 தேக்கரண்டி தேன்

ஆவ் எனது பிரஷர் குக்கர் கேக் செய்வது எப்படி | How to make Awwww my pressure cooker cake in Tamil

 1. பிரஷர் குக்கரை ப்ரீ ஹீட் செய்யவும். இதற்க, குக்கரை மூடியோடு உயர் தீயில் 15 நிமிடங்கள் வைக்கவும் (கேஸ்கெடும் விசிலும் இல்லாமல்).
 2. ஒரு கிண்ணத்தில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, ஒரு சிட்டிகை உப்பு, மாவு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து எடுத்து வைக்கவும். பிறகு பழுப்புச் சர்க்கரையை ஒரு பிளண்டரில் போட்டு பவுடராக்கிக்கொள்க.
 3. எண்ணெய் சேர்த்து மீண்டும் கலக்கிக்கொள்க. அடுத்து பாதி கப் வெதுவெதுப்பானத் தண்ணீர் எடுத்து பால் பவுடர் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்க. பாலை பழுப்புச் சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து மென்மையானச் சாந்தாகத் தயாரிப்பதற்கு கூழ் தூள் சேர்க்கவும்
 4. முழுமையான மென்மையாகும்வரை கலவையை அடித்துக்கொள்க. ஒரு எலக்ட்ரிக் அல்லது ஹேண்ட் பீட்டரால் பொருள்களை நன்றாகக் கலக்கிக்கொள்க. மெதுவாக மாவை சலித்துக்கொள்க.
 5. டின்னில் எண்ணெய் தடவி கேக் மாவை ஊற்றவும். எள்ளையும் வறுத்த முந்திரி பருப்பையும் மேலே பரப்பவும். பிரஷர் குக்கரில் போட்டு கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்க அல்லது வேகும் வரையில் வேகவைக்கவும்.
 6. இப்போது குக்கரைத் திறந்து 2 தேக்கரண்டி தேன் எடுத்து மேலே ஊற்றவும். அதன்பின்னர் கேக்கை பிரஷர் குக்கரில் கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் விட்டு வைக்கவும்.
 7. 5 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் பிரஷர் குக்கரை ஒரு சூடான மூடியால் மூடி மீண்டும் 5 நிமிடங்கள் சிறு தீயில் வைக்கவும். கேக் தயார். டீயோடு உண்டு மகிழவும்..

Reviews for Awwww my pressure cooker cake in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.