வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு அடை

Photo of Sweet ada by sudha rani at BetterButter
312
0
0.0(0)
0

இனிப்பு அடை

Nov-20-2018
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு அடை செய்முறை பற்றி

குறுகிய கால உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. அரிசி ரவை 1 கப்
  2. வெல்லம் 3/4 கப்
  3. தண்ணீர் 1 கப்
  4. தேங்காய் துண்டுகள் சிறிது
  5. முந்திரி
  6. திராட்சை
  7. ஏலக்காய்த்தூள்
  8. ஜாதிக்காய் பொடி
  9. சுக்கு தூள்
  10. கடலைப்பருப்பு
  11. பாசிப்பருப்பு

வழிமுறைகள்

  1. அரிசியை 2 மணி நேரம் வரை ஊறவிடவும் பின் உலர்த்தி மாவாக திரிக்கவும்
  2. திரித்த மாவை ஜலித்தால் மாவு எல்லாம் விழுந்து ரவை அரிசி மற்றும் நிற்கும்
  3. வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
  4. கடலைப்பருப்பு மற்றும் பாசிப்பருப்பை ஊறவிட்டு வேகவைத்து வைக்கவும்
  5. வெல்லம் கொதிக்கும் போது நெய் மற்றும் வேகவைத்த பருப்பு மற்றும் தேங்காய் துண்டுகள் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. நன்கு கொதிக்கும் போது அரிசி ரவையை சேர்த்து நன்கு கிளறவும்
  7. பின் நன்கு திரண்டு வரும் போது சிறிது நெய் விட்டு கிளறி இறக்கவும்
  8. ஆறியதும் உருண்டை பிடித்து ஆவியில் 8 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்
  9. அரிசி மாவை முதல் நாளே ரெடி செய்து கொண்டால் தேவைப்படும் போது சீக்கிரம் செய்ய உதவும்
  10. இதிலிருந்து எடுக்கும் அரிசி மாவை நன்கு வறுத்து வைத்தால் இடியாப்பம் செய்ய முடியும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்