வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் காய்கறி குழிப்பணியாரம்

Photo of Instant Vegetable Kuzhipaniyaram by Sowmya Sundar at BetterButter
577
0
0.0(0)
0

இன்ஸ்டன்ட் காய்கறி குழிப்பணியாரம்

Nov-20-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் காய்கறி குழிப்பணியாரம் செய்முறை பற்றி

இட்லி மாவு ,ரவை மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்த உடனடி குழிப்பணியாரம்.இட்லி மாவு சிறிதளவே இருக்கும் போது இப்படி செய்து கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி மாவு ஒரு கப்
  2. வெள்ளை ரவை கால் கப்
  3. அரிசி மாவு கால் கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. பொடியாக நறுக்கிய வெங்காயம் 1
  6. பொடியாக நறுக்கிய காரட் 1
  7. பச்சை மிளகாய் 3
  8. இஞ்சி துருவல் 1 டீஸ்பூன்
  9. கறிவேப்பிலை சிறிது
  10. பெருங்காயம் 1/4 டீஸ்பூன்
  11. எண்ணெய் பணியாரம் செய்ய

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் (எண்ணெய் தவிர ) சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கலந்து கொள்ளவும்.இதை பத்து நிமிடம் ஊற வைக்கவும்
  2. பணியாரச் சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை குழிகளில் விடவும்
  3. மிதமான தீயில் நன்றாக வேக வைத்து திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து கொள்ளவும்
  4. இன்ஸ்டன்ட் காய்கறி குழிபணியாரம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்