வீடு / சமையல் குறிப்பு / தக்காளி பணியாரம்

Photo of Tomato panniyaram by Krishnasamy Vidya Valli at BetterButter
328
0
0.0(0)
0

தக்காளி பணியாரம்

Nov-21-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

தக்காளி பணியாரம் செய்முறை பற்றி

கையில் உள்ள ஒரு கப் தோசைமாவை வைத்து எளிதில் செய்யலாம் இந்த தக்காளி பணியாரம். மாலை நேரத்திற்கு ஏற்ற அருமையான ஸ்நாக்ஸ் வெரைட்டி இது. ஒருவருக்கு இரண்டு வீதம் ஏழு நபர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. தோசை மாவு 1 கப்
  2. கடலை மாவு அரிசி மாவு ரவை தலா ஒரு மேஜைக்கரண்டி
  3. தக்காளி 2
  4. பச்சைமிளகாய்-2
  5. கொத்தமல்லி இலை சிறிது பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  6. உப்பு 1/4 தேக்கரண்டி (தோசைமாவில் இருக்கும் உப்பிற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும்)
  7. தனியா பொடி சீரகப் பொடி மிளகு பொடி கரம் மசாலா தலா கால் தேக்கரண்டி
  8. குழிப்பணியாரம் செய்ய தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. தக்காளி பச்ச மிளகாய் உப்பு மற்றும் பொடிகள் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  2. அரைத்த விழுது கடலைமாவு அரிசி மாவு ரவை தோசை மாவு கொத்தமல்லி இலை எல்லாம் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. குழிப்பணியாரக் கடாயில் எண்ணெய் விட்டு மாவை விட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சுடாக சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்