BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழம்,கஸ்டர்ட் ஓப்பன் டோஸ்ட்

Photo of Banana,Custard Open Toast by Sowmya Sundar at BetterButter
0
0
0(0)
0

வாழைப்பழம்,கஸ்டர்ட் ஓப்பன் டோஸ்ட்

Nov-21-2018
Sowmya Sundar
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழம்,கஸ்டர்ட் ஓப்பன் டோஸ்ட் செய்முறை பற்றி

வாழைப்பழம் , பால் மற்றும் கஸ்டர்ட் பவுடர் சேர்த்து செய்த ஆரோக்கியமான ப்ரேக்ஃபாஸ்ட் இது. சட்டென செய்யக்கூடியது . ஒருவருக்கு இரண்டு துண்டுகள் வீதம் மூன்று பேர்க்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • భారతీయ
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைப்பழம் 2
  2. பிரட் துண்டுகள் 6
  3. பால் 1/2 கப்
  4. கஸ்டர்ட் பவுடர் 2 டீஸ்பூன்
  5. சர்க்கரை 2 டேபிள் ஸ்பூன்
  6. வெனிலா எசன்ஸ் 1/4 டீஸ்பூன்
  7. வெண்ணெய் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் வாழைப் பழங்களை சேர்த்து ஹாண்ட் பிளண்டரில்/ மத்தில் நன்றாக மசித்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் கஸ்டர்ட் பவுடர்,சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் .
  3. பிரட்டில் தடவ கலவை தயார்.பிரட்டில் ஒரு பக்கம் முழுவதும் படுமாறு இந்த கலவையை நன்றாக தடவி கொள்ளவும்.
  4. இப்போது சூடான பானில் வெண்ணெய் போட்டு அதில் கலவை தடவிய பக்கம் அடியில் வருமாறு பிரட்டை வைத்து குறைந்த தீயில் இரண்டு நிமிடங்கள் பொன்னிறமாக டோஸ்ட் செய்து கொள்ளவும் .
  5. பின் மறுபக்கம் திருப்பி ஒரு நிமிடம் டோஸ்ட் செய்து கொள்ளவும்
  6. பெரிய பான் என்றால் ஒரே சமயம் இரண்டு ஸ்லைஸ் டோஸ்ட் செய்து விடலாம்.
  7. டோஸ்ட் செய்து எடுத்த பின் மேலே தேன் விட்டு கொடுக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்