வீடு / சமையல் குறிப்பு / பஞ்சாபி தம் ஆலூ

Photo of Punjabi Dhum Aloo by Nazeema Banu at BetterButter
622
1
5.0(0)
0

பஞ்சாபி தம் ஆலூ

Nov-22-2018
Nazeema Banu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பஞ்சாபி தம் ஆலூ செய்முறை பற்றி

சப்பாத்தி.புல்கா.நான் வகைகளுக்கு பொருத்தமான சைட்டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • பஞ்சாபி
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பேபி பொடேடோ கால் கிலோ
  2. தக்காளி இரண்டு
  3. பெ.வெங்காயம் 2
  4. இஞ்சி பூண்டு விழுது இரண்டு ஸ்பூன்
  5. மி.தூள் ஒரு ஸ்பூன்
  6. கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன்
  7. உப்பு தே.அளவு
  8. எண்ணெய் தே.அளவு
  9. ட்ரை கசூரி மேத்தி இரண்டு ஸ்பூன்
  10. சோம்பு அரை ஸ்பூன்
  11. பட்டை கிராம்பு ஏலம் தலா இரண்டு
  12. பிரிஞ்சி இலை மூன்று

வழிமுறைகள்

  1. உ.கிழங்குகளை உப்பு.ம.தூள் சேர்த்து முழுசாக வேக விடவும்.
  2. வெந்த கிழங்குகளை தோலுரித்து வைக்கவும்
  3. கிழங்கில் சிறிது உப்பு மி.தூள் சேர்த்து கடாயில் ஒரு ஸ்பூன் ஆயில் விட்டு லேசாக வதக்கி எடுக்கவும்.
  4. கடாயில் எண்ணெய் விட்டு பட்டை. கிராம்பு. ஏலம். சோம்பு. பிரிஞ்சி இலை சேர்த்து வறுக்கவும்.
  5. வெங்காயம்.தக்காளியை விழுதாக அரைத்து இதில் சேர்க்கவும்.
  6. அதில் மி.தூள்.ம.தூள்.கரம் மசாலா தூள்.இஞ்சி பூண்டு விழுது.காய்ந்த கசூரிமேதி சேர்த்து கிளறவும்.
  7. பச்சை வாசனை போனதும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கிழங்குகளை முள் கரண்டியால் அங்கங்கே இலேசாக குத்தி மசாலாவில் சேர்க்கவும்.
  8. நன்றாக கொதித்து எல்லாம் ஒன்று சேர்ந்து எண்ணெய் பிரியும் போது இறக்கவும்.
  9. சுவையான தம் ஆலு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்