வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் சிறுதானிய மாவு மினி தோசை

Photo of Instant Millet flour mini dosai by Krishnasamy Vidya Valli at BetterButter
341
0
0.0(0)
0

இன்ஸ்டன்ட் சிறுதானிய மாவு மினி தோசை

Nov-22-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் சிறுதானிய மாவு மினி தோசை செய்முறை பற்றி

அவசரநேரத்தில் எளிதில் செய்யலாம் ஆரோக்யமான இந்த தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சிறுதானிய மாவு 1/4 கப்
  2. அரிசி மாவு 1/8 கப்
  3. தயிர் 1/8 கப்
  4. பொடியாக நறுக்கிய கேரட் 1
  5. இஞ்சி ஒரு சிறிய துண்டு பொடியாக நறுக்கவும்
  6. பச்ச மிளகாய் 1 அல்லது 2 பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  7. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிது பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  8. உப்பு 1/4 தேக்கரண்டி
  9. பெருங்காயம் நான்கு சிட்டிகை
  10. மிளகு சீரகம் தலா 1/4 தேக்கரண்டி ஒன்று இரண்டாக தட்டிக்கொள்ளவும்
  11. தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்
  2. தோசை கல்லில் எண்ணெய் தடவி உள்ளங்கையளவிற்கு சிறுசிறு தோசை தோசையாக வார்த்து எடுக்கவும்
  3. சட்னி அல்லது சாம்பார் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்