வீடு / சமையல் குறிப்பு / வறுத்த பூண்டு கத்திரிக்காய் சாதம் வித் முந்திரி ரைத்தா

Photo of Fried Garlic Brinjal Rice with Cashewnut Raita by Sowmya Sundar at BetterButter
589
0
0.0(0)
0

வறுத்த பூண்டு கத்திரிக்காய் சாதம் வித் முந்திரி ரைத்தா

Nov-22-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வறுத்த பூண்டு கத்திரிக்காய் சாதம் வித் முந்திரி ரைத்தா செய்முறை பற்றி

வறுத்த பூண்டு , கத்திரிக்காய் மற்றும் அரைத்த பொடி சேர்த்து செய்த சாதம். மீதமான சாதத்திலும் ஈசியாக செய்து கொடுக்கலாம். இதற்கு தொட்டு கொள்ள சட்டென செய்யலாம் வித்யாசமான முந்திரி ரைத்தா .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வறுத்து பூண்டு கத்திரிக்காய் சாதம் செய்ய :
  2. வடித்த சாதம் ஒன்றரை கப்
  3. நறுக்கிய கத்திரிக்காய் ஒரு கப்
  4. பெரிய வெங்காயம் ஒன்று
  5. பூண்டுப்பற்கள் 12
  6. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்+ 1 டீஸ்பூன்
  7. கடுகு ,உளுத்தம்பருப்பு , கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன்
  8. வறுத்த வேர்க்கடலை ஒரு டேபிள்ஸ்பூன்
  9. கறிவேப்பிலை சிறிது
  10. உப்பு தேவையான அளவு
  11. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  12. எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன்
  13. வறுத்து பொடி செய்ய
  14. கடலைபருப்பு , மல்லி விதை தலா ஒரு டேபிள்ஸ்பூன்
  15. மிளகாய் வத்தல் -4
  16. பட்டை துண்டு, கிராம்பு ,ஏலக்காய் தலா 2
  17. தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
  18. முந்திரி ரைத்தா செய்ய:
  19. முந்திரிப்பருப்பு - 12
  20. பச்சை மிளகாய் 2
  21. தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன்
  22. தயிர் ஒரு கப்
  23. உப்பு தேவையான அளவு
  24. கொத்தமல்லி இலை சிறிதளவு
  25. எண்ணெய் 1/4 டீஸ்பூன்
  26. கடுகு 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வறுத்து பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.இதை முன்னமே செய்து வைத்து கொண்டு உபயோகப்படுத்தலாம்.
  2. முந்திரிப்பருப்பை சூடான நீரில் பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்
  3. முதலில் கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டை நன்றாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்
  4. அதே கடாயில் மேலும் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ,வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதில் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.
  5. வெங்காயம் சிறிது வதங்கியதும் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து மூடி வைத்து நன்றாக வதக்கவும்
  6. காய் வதங்குவதற்குள் ரைத்தா செய்ய ஊறிய முந்திரிப்பருப்பு, தேங்காய் துருவல் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்
  7. இதை தயிரில் கலந்து உப்பு, கொத்தமல்லி சேர்த்து கொள்ளவும்.எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும். முந்திரி ரைத்தா தயார்.
  8. கத்திரிக்காய் வதங்கியதும் அரைத்த பொடி சேர்த்து கிளறி இறக்கவும்
  9. இதனுடன் வடித்த சாதம், எலுமிச்சை சாறு, வறுத்து தனியாக வைத்த பூண்டு சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும். பூண்டு கத்திரிக்காய் சாதம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்