வீடு / சமையல் குறிப்பு / பால் பவுடர் பர்ஃபி

Photo of MILK POWDER BURFI by Raihanathus Sahdhiyya at BetterButter
466
1
0.0(0)
0

பால் பவுடர் பர்ஃபி

Nov-23-2018
Raihanathus Sahdhiyya
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பால் பவுடர் பர்ஃபி செய்முறை பற்றி

மிகவும் சுலபமாக 20 நிமிடத்தில் சுவையாக செய்திடும் பர்ஃபி செய்முறை இதோ!!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • இந்திய
  • ஸ்டிர் ஃபிரை
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பால் பவுடர்: 1 கப்
  2. பொடித்த சர்க்கரை : 1/2 கப்
  3. நெய்: 1/4 கப்
  4. பால் : 1/4 கப் (காய்ச்சியது)
  5. நறுக்கிய பாதாம், பிஸ்தா - தேவையான அளவு
  6. ஏலக்காய் தூள் : 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு நான் ஸ்டிக் பாத்திரம் அல்லது அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு உருக்கவும்
  2. பிறகு அதில் பால் சேர்த்து நன்றாக கலக்கவும்
  3. அதில் பால் பவுடர் சேர்த்து கட்டி பிடிக்காமல் நன்றாக கலக்கவும்.
  4. அந்த கலவையில் பொடித்த சர்க்கரை சேர்க்கவும். இப்பொழுது நீர் விடும்.. நன்றாக கிளறி விடவும்
  5. கலவை திக்கான உடன் கை விடாமல் கிளற வேண்டும். ஏலக்காய் தூள் சேர்க்கவும்
  6. கலவை ஒரு சேர திரண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் பிரிந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும்
  7. ஒரு நெய் தடவிய தட்டில் அதை சேர்க்கவும். ஒரு ஸ்பூன் கொண்டு சமப்படுத்தி அதன் மீது நறுக்கிய பாதாம் பிஸ்தா தூவவும்
  8. சுவையான சுலபமான பால் பவுடர் பர்ஃபி தயார்..
  9. குளிர்ந்த பின் துண்டுகளாக்கி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்