வீடு / சமையல் குறிப்பு / மைக்ரோவேவ் சிம்பிள் பொரிச்ச கூட்டு

Photo of Microwave simple poricha kuttu by Krishnasamy Vidya Valli at BetterButter
201
0
0.0(0)
0

மைக்ரோவேவ் சிம்பிள் பொரிச்ச கூட்டு

Nov-23-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மைக்ரோவேவ் சிம்பிள் பொரிச்ச கூட்டு செய்முறை பற்றி

காலை நேர பரபரப்பில் மைகரொவேவ் அவனிலேயே எளிதில் பொரிச்ச கூட்டு செய்யலாம். தாளிப்பதற்கு மட்டும் அடுப்பை பயன்படுத்தினால் போதும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மைக்ரோவேவிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொடியாக நறுக்கிய விருப்பமான காய்கள் 2 கப்
  2. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  3. பாசிப்பருப்பு கால் கப்
  4. உப்பு ஒரு தேக்கரண்டி
  5. அப்படியே அரைக்க தேவையானவை
  6. தேங்காய்த் துருவல் அரை கப்
  7. மிளகாய் வத்தல் 3
  8. சீரகம் 1 தேக்கரண்டி
  9. தாளிக்க தேவையானவை
  10. தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி
  11. கடுகு உளுத்தம் பருப்பு தலா 1 தேக்கரண்டி
  12. கருவேப்பிலை 2 ஆர்க்கு
  13. பெருங்காயம் 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. காய்கறி நறுக்கும் வரை பாசி பருப்பை வெந்நீரில் ஊற வைக்கவும்
  2. அதோடு நறுக்கிய காய்கறிகள் மஞ்சள்தூள் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் மைக்ரோ அவனில் வைக்கவும்
  3. அதே நேரத்தில் அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக்கொள்ளவும்
  4. காய்களை உப்பு சேர்த்து மீண்டும் 3 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்
  5. அரைத்த விழுது சேர்த்து ஐந்து நிமிடங்கள் அவனில் கொதிக்க விடவும்
  6. அவை கொதிக்கும் நேரத்தில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து தயாராக வைக்கவும்
  7. அவனிலிருந்து வெளியே எடுத்து தாளித்ததை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்