வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய், முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு

Photo of Brinjal Drumstick Poricha Kuzhambu by Sowmya Sundar at BetterButter
894
1
0.0(0)
0

கத்திரிக்காய், முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு

Nov-24-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய், முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்முறை பற்றி

அவசர நேரங்களில் சட்பட் ஆக செய்யலாம் இந்த பொரிச்ச குழம்பு.எண்ணெயில்லா குழம்பு வெரைட்டி இது.காய் எதுவும் இல்லாத நேரத்திலும் , இரவு நேரத்திலும் இதே முறையில் காய் எதுவும் சேர்க்காமலும் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முருங்கைக்காய் 2
  2. கத்திரிக்காய் 4
  3. துவரம்பருப்பு கால் கப்
  4. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. அரைக்க
  7. தேங்காய் துருவல் 1/4 கப்
  8. சாம்பார் பொடி 1 டீஸ்பூன்
  9. பெருங்காயம் 1/2 டீஸ்பூன்
  10. சீரகம் 1/2 டீஸ்பூன்
  11. அரிசி மாவு 1 டீஸ்பூன்
  12. தாளிக்க
  13. நெய் 1 டீஸ்பூன்
  14. கடுகு,உளுத்தம் பருப்பு,சீரகம் தலா 1/2 டீஸ்பூன்
  15. கறிவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. துவரம்பருப்பை ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  2. அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  3. அதேநேரம் மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு முருங்கைக்காய் , கத்தரிக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
  4. காய் வெந்ததும் அரைத்த விழுது ,வெந்த பருப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்
  5. தாளிக்க கொடுத்தவற்றை நெய்யில் தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்