வீடு / சமையல் குறிப்பு / பிடி கொழுக்கட்டை

Photo of Pidi Kozhukattai by Jayasakthi Ekambaram at BetterButter
356
0
0.0(0)
0

பிடி கொழுக்கட்டை

Nov-24-2018
Jayasakthi Ekambaram
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பிடி கொழுக்கட்டை செய்முறை பற்றி

காய்ந்த அரிசி மாவை வறுத்து வெல்லப்பாகு சேர்த்து செய்யும் பிடிகொழுக்கட்டை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பச்சரிசி 2 ஆழாக்கு
  2. வெல்லம் 2 ஆழாக்கு
  3. தண்ணீர் அரை டம்ளர்
  4. பயித்தம் பருப்பு 2 ஸ்பூன்
  5. தேங்காய்த் துண்டுகள் 2ஸ்பூன்
  6. கருப்பு எள் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசி மாவை வாணலியில் சிறிது நேரம் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்
  2. வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு எள் பயித்தம் பருப்பு தேங்காய் துண்டுகளை வறுத்து கொள்ள வேண்டும்
  3. வறுத்த பொருட்களை அரிசிமாவுடன் சேர்த்துக் கொள்ளவும்
  4. தண்ணீர் ஊற்றி வெல்லத்தைக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும்
  5. அரிசி மாவில் இந்த வெல்லப் பாகை கலந்து பிசைந்து கொள்ள வேண்டும்
  6. பிசைந்த மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைக்க வேண்டும்
  7. 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆஃப் பண்ணி கொழுக்கட்டைகளை எடுத்து தட்டில் வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்