வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட்கான் பூரி

Photo of Sweetcorn puri by Krishnasamy Vidya Valli at BetterButter
377
0
0.0(0)
0

ஸ்வீட்கான் பூரி

Nov-24-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட்கான் பூரி செய்முறை பற்றி

காரம் இனிப்பு புளிப்பு உப்பு இப்படி எல்லாம் கலந்த சுவையில் அருமையாக இருக்கும். தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. தயிர் சாலட் போதுமானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ஸ்வீட்கான் 1/4 கப்
  2. கோதுமை மாவு கால் கப் +2 மேஜைக்கரண்டி
  3. ரவை 1 தேக்கரண்டி
  4. உப்பு 1/4 தேக்கரண்டி
  5. தனியா பொடி சீரகப் பொடி கரம் மசாலா பொடி ஆம்சூர் பொடி தலா 1/4 தேக்கரண்டி
  6. பச்ச மிளகாய் 1 அல்லது 2
  7. பெருங்காயம் 1/8 தேக்கரண்டி
  8. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது இரண்டு தேக்கரண்டி
  9. பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஸ்வீட்கான் உப்பு பெருங்காயம் பச்ச மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  2. அரைத்த விழுதுடன் கோதுமை மாவு ரவை கொத்தமல்லி இலை தனியா பொடி சீரகப்பொடி ஆம்சூர் பொடி கரம் மசாலா சேர்த்து பூரி மாவு போன்று பிசைந்து கொள்ளவும்
  3. பூரியாக இட்டுக்கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. தயிர் சாலட் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்