வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சேமியா

Photo of Tomato vermicelli baath by Deepa Srivatsan at BetterButter
194
0
0.0(0)
0

தக்காளி சேமியா

Nov-24-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சேமியா செய்முறை பற்றி

சேமியா உப்மாவிற்க்கு பதிலாக இது மாதிரி செய்தால் வித்தியாசமான சுவையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சேமியா 100 கிராம்
  2. தக்காளி-3
  3. மிளகாய்வற்றல் 2
  4. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
  5. உப்பு தேவையான அளவு
  6. உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன்
  7. கடுகு கால் ஸ்பூன்
  8. கடலைப்பருப்பு அரை ஸ்பூன்
  9. எண்ணெய் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சேமியாவை 1 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும் அதற்கு மேல் ஊற வைக்க கூடாது இல்லை என்றால் குழைந்துவிடும்
  2. அதன் பிறகு கொதிக்கும் நீரில் சேமியாவை ஒரு நிமிடம் போட்டு எடுத்து வடிதட்டில் போடவும் அதன் மீது சிறிது குளிர்ந்த நீர் ஊற்றவும்
  3. மிக்ஸியில் தக்காளி மிளகாய் வற்றல் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு போட்டு அது வெடித்ததும் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. 5 நிமிடம் கழித்து வடித்து வைத்துள்ள சேமியாவை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்