எலுமிச்சை ரசம் | Lime rasam in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  24th Nov 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Lime rasam by Krishnasamy Vidya Valli at BetterButter
எலுமிச்சை ரசம்Krishnasamy Vidya Valli
  • ஆயத்த நேரம்

    2

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    25

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

1

0

எலுமிச்சை ரசம் recipe

எலுமிச்சை ரசம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Lime rasam in Tamil )

  • தக்காளி 2 அல்லது 3
  • துவரம் பருப்பு கால் கப்
  • எலுமிச்சை சாறு இரண்டு தேக்கரண்டி
  • கட்டிப் பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  • இஞ்சி ஒரு சிறிய துண்டு
  • உப்பு 1 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் ஒன்று அல்லது இரண்டு கீரி போடவும்
  • மஞ்சள் பொடி 1/8 தேக்கரண்டி
  • ரசப் பொடி ஒன்றரை தேக்கரண்டி
  • கொத்தமல்லி பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி
  • தாளிக்க தேவையானவை
  • நெய் ஒரு தேக்கரண்டி
  • கடுகு ஒரு தேக்கரண்டி
  • மிளகாய்வற்றல் 1
  • மிளகு சீரகம் தலா அரை தேக்கரண்டி ஒன்றிரண்டாக தட்டி போடவும்
  • பெருங்காயம் ஒரு சிட்டிகை
  • கருவேப்பிலை 2 ஆர்க்கு

எலுமிச்சை ரசம் செய்வது எப்படி | How to make Lime rasam in Tamil

  1. பருப்பை பிரஷர்பானில் நேரடியாக (15 நிமிடங்கள் வரை ஆகும்) குழைய வேக வைத்து எடுக்கவும்
  2. தக்காளியை நறுக்கி அதோடு உப்பு மஞ்சள் பொடி இஞ்சி பச்சை மிளகாய் கட்டிப் பெருங்காயம் ரசப்பொடி மற்றும் 3 கப் தண்ணீர் சேர்த்து மற்றொரு அடுப்பில் கொதிக்கவிடவும்
  3. முதலில் வைத்த தண்ணீர் சிறிது குறைந்தவுடன் (தக்காளி வெந்த பின்னர்) வேகவைத்த பருப்பை நன்றாக தண்ணீர் விட்டு கடைந்து சேர்க்கவும்
  4. பொங்கி வரும் நேரத்தில் அடுப்பை அணைத்து விடவும். தளதளவென கொதிக்க வேண்டாம்.
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து சேர்த்து கொத்தமல்லி இலை தூவி எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்

எனது டிப்:

ரஸப்பொடி பிரஷ்ஷாக திரித்து சேர்த்தால் கூடுதல் சுவை.

Reviews for Lime rasam in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.