வீடு / சமையல் குறிப்பு / எலுமிச்சை ரசம்

Photo of Lime rasam by Krishnasamy Vidya Valli at BetterButter
508
0
0.0(0)
0

எலுமிச்சை ரசம்

Nov-24-2018
Krishnasamy Vidya Valli
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

எலுமிச்சை ரசம் செய்முறை பற்றி

எளிதில் செய்யலாம் ஆரோக்கியமான இந்த ரஸம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளி 2 அல்லது 3
  2. துவரம் பருப்பு கால் கப்
  3. எலுமிச்சை சாறு இரண்டு தேக்கரண்டி
  4. கட்டிப் பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  5. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  6. உப்பு 1 தேக்கரண்டி
  7. பச்சை மிளகாய் ஒன்று அல்லது இரண்டு கீரி போடவும்
  8. மஞ்சள் பொடி 1/8 தேக்கரண்டி
  9. ரசப் பொடி ஒன்றரை தேக்கரண்டி
  10. கொத்தமல்லி பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி
  11. தாளிக்க தேவையானவை
  12. நெய் ஒரு தேக்கரண்டி
  13. கடுகு ஒரு தேக்கரண்டி
  14. மிளகாய்வற்றல் 1
  15. மிளகு சீரகம் தலா அரை தேக்கரண்டி ஒன்றிரண்டாக தட்டி போடவும்
  16. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  17. கருவேப்பிலை 2 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. பருப்பை பிரஷர்பானில் நேரடியாக (15 நிமிடங்கள் வரை ஆகும்) குழைய வேக வைத்து எடுக்கவும்
  2. தக்காளியை நறுக்கி அதோடு உப்பு மஞ்சள் பொடி இஞ்சி பச்சை மிளகாய் கட்டிப் பெருங்காயம் ரசப்பொடி மற்றும் 3 கப் தண்ணீர் சேர்த்து மற்றொரு அடுப்பில் கொதிக்கவிடவும்
  3. முதலில் வைத்த தண்ணீர் சிறிது குறைந்தவுடன் (தக்காளி வெந்த பின்னர்) வேகவைத்த பருப்பை நன்றாக தண்ணீர் விட்டு கடைந்து சேர்க்கவும்
  4. பொங்கி வரும் நேரத்தில் அடுப்பை அணைத்து விடவும். தளதளவென கொதிக்க வேண்டாம்.
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து சேர்த்து கொத்தமல்லி இலை தூவி எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்