வீடு / சமையல் குறிப்பு / காலிப்ளவர் முட்டை ஆம்லெட்

Photo of Cauliflower egg omlette by Asiya Omar at BetterButter
265
0
0.0(0)
0

காலிப்ளவர் முட்டை ஆம்லெட்

Nov-25-2018
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

காலிப்ளவர் முட்டை ஆம்லெட் செய்முறை பற்றி

காலிப்ளவர் பிடிக்காதவங்க கூட இப்படி சமைத்துக் கொடுத்தால் ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவாங்க. டயட்டில் இருப்பவங்க முழு நேர உணவாக சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வேக வைத்து உதிர்த்த காலிப்ளவர் -1 கப்
  2. முட்டை -2
  3. நறுக்கிய வெங்காயம் -1
  4. நறுக்கிய மிளகாய் -1
  5. நறுக்கிய மல்லி இலை -சிறிது
  6. இஞ்சி பூண்டு -1/2 தேக்கரண்டி
  7. கரம் மசாலா,சீரகம்,சோம்புத்தூள் - தலா 1/4 தேக்கரண்டி
  8. மிளகுத்தூள் -1/4 அல்லது 1/2 தேக்கரண்டி
  9. மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  11. உப்பு - தேவைக்கு
  12. நெய் அல்லது எண்ணெய் -2 -3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. காலிப்ளவர் கொதிக்கும் நீரில் போட்டு பாதி வெந்ததும் வடிகட்டி பொடியாக நறுக்கி எடுக்கவும். வெங்காயம்,மல்லி,மிளகாய் நறுக்கி தயார் செய்யவும்.
  2. இத்துடன் மசால் பொருட்கள்,இஞ்சி பூண்டு உப்பு தேவைக்குச் சேர்க்கவும்
  3. முட்டை சேர்க்கவும்.நன்கு ஒரு சேர கலக்கவும்.
  4. ஒரு தவாவில் நெய் சேர்க்கவும்.
  5. கலவையை தோசை போல் பரத்தி விடவும்.மூடி வேக விடவும்.
  6. திறந்து பிரட்டி இரு புறமும் லேசாக சிவறும் படி ஆம்லெட் போட்டு எடுக்கவும்.
  7. சுவையான சத்தான காலிப்ளவர் முட்டை ஆம்லெட் தயார்.
  8. டயட் இருப்பங்க அப்படியே முழு நேர உணவாகச் சாப்பிடலாம். ரசம் சாம்பார் சாதத்திற்கு செமையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்