BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சாளைமீன் முருங்கைக்காய் குழம்பு

Photo of Sardines drumstick curry by Asiya Omar at BetterButter
0
0
0(0)
0

சாளைமீன் முருங்கைக்காய் குழம்பு

Nov-25-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாளைமீன் முருங்கைக்காய் குழம்பு செய்முறை பற்றி

அரைமணி செம ருசியான மீன் குழம்பு ,வறுவல் சூடான சாதம்னு செய்து பரிமாறி இப்படி அசத்தலாம்.

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாளை மீன் -6
  2. முருங்கைக்காய் -1
  3. வெங்காயம் -1
  4. பூண்டு பற்கள் -4
  5. தக்காளி -1
  6. பச்சை மிளகாய் -2
  7. கருவேப்பிலை -1 இணுக்கு
  8. புளிக்கரைசல் பெரிய நெல்லியளவு புளியில்
  9. மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
  10. சீரகத்தூள் -1/2 தேக்கரண்டி
  11. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  12. நல்லஎண்ணெய் -2 மேஜைக்கரண்டி
  13. கடுகு -1/2 தேக்கரண்டி
  14. வெந்தயம் -1/4 கால் தேக்கரண்டி
  15. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. மீன் சுத்தம் செய்து எடுத்து வைக்கவும்.வெங்காயம் பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். தக்காளியும் அரைக்கவும்.
  2. ஒரு மண்சட்டியில் எண்ணெய் கடுகு,வெந்தயம் சேர்த்து வெடிக்கவும்,கருவேப்பிலை சேர்த்து ,பச்சை மிளகாய்,அரைத்த வெங்காயம் பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. அடுத்து தக்காளி விழுது சேர்த்து உப்பும் சேர்த்து பச்சை வாடை மடங்க விடவும்.
  4. அடுத்துமேற் சொன்ன மசாலா தூள் வகைகள் சேர்க்கவும் .புளி கரைத்து வைக்கவும்.
  5. மசாலா சேர்த்து பிரட்டி புளிக்கரைசல் சேர்க்கவும்.நன்கு கொதிக்க வேண்டும்.
  6. முருங்கைக்காய் சேர்த்து மூடி வேக விடவும்.முருங்கைக்காய் தனியாக வேகவிட்டும் சேர்க்கலாம்.
  7. மீன் சேர்க்கவும் .கொதி வரும்.அகப்பை போடமல் சட்டியை அசைத்து கலந்து விடவும்.
  8. முருங்கைக்காய் வெந்து மீன் போட்டு 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
  9. சுவையான சூப்பரான மீன் குழம்பு தயார்.
  10. குழம்பு கெட்டியாக இப்படி இருக்க வேண்டும்.
  11. சூடான சாதத்துடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்