வீடு / சமையல் குறிப்பு / சூஜி மசாலா சப்பாத்தி

Photo of Sooji masala chapathi by Krishnasamy Vidya Valli at BetterButter
256
0
0.0(0)
0

சூஜி மசாலா சப்பாத்தி

Nov-25-2018
Krishnasamy Vidya Valli
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சூஜி மசாலா சப்பாத்தி செய்முறை பற்றி

எளிதில் செய்யலாம் மிருதுவான இந்த சூஜி மசாலா சப்பாத்தி. ஒருவருக்கு மூன்று வீதம் மூன்று நபர்களுக்கு கொடுக்கலாம்.வட இந்தியாவின் சூஜி பராத்தாவில் சில மாறுதல்கள் செய்து லேசான சப்பாத்தியாக செய்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை அரை கப்
  2. கோதுமை மாவு கால் கப்
  3. உப்பு அரை தேக்கரண்டி
  4. காஷ்மீர் சில்லி பவுடர் அரை தேக்கரண்டி
  5. சீரகம் அரை தேக்கரண்டி
  6. தனியா பொடி சீரகப்பொடி ஆம்சூர் பொடி மிளகு பொடி கரம் மசாலா பொடி தலா கால் தேக்கரண்டி
  7. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி
  8. எண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி
  9. சப்பாத்தி வாட்டுவதற்கு தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் ஒன்றரைக் கப் தண்ணீர் மற்றும் பாதி அளவு உப்பு சிறிது எண்ணெய் சேர்த்து கொதிக்க விட்டு நன்றாகக் கொதி வந்ததும் ரவை சேர்த்து கிளறி இறக்கவும்
  2. சிறிது ஆறவைத்து கொடுக்கப்பட்ட மற்ற பொருள்கள் மீதமுள்ள எண்ணெய் உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் தெளித்துக்கொள்ளவும்
  3. சப்பாத்தியாக இட்டு தோசைக்கல்லில் எண்ணெய் அல்லது நெய் விட்டு வாட்டி எடுக்கவும்
  4. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை தயிர் சாலட் போதுமானது
  5. ஒரு சப்பாத்தி வாட்டும் நேரத்தில் மற்றொரு சப்பாத்தி இட்டுக்கொள்ளவும். நேரமும் மிச்சமாகும் நன்றாக ஒட்டாமல் இடவரும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்