வீடு / சமையல் குறிப்பு / சவுத் இந்தியன் பருப்பு குழம்பு

Photo of South Indian paruppu kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
606
0
0.0(0)
0

சவுத் இந்தியன் பருப்பு குழம்பு

Nov-25-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சவுத் இந்தியன் பருப்பு குழம்பு செய்முறை பற்றி

தமிழ்நாட்டில் செய்யப்படும் எளிமையான குழம்பு வெரைட்டி இது. புளியில்லாமல் வெங்காயம் பூண்டு சேர்த்து செய்வார்கள். ஆனால் நோ ஆனியன் நோ கார்லிக் ரெசிபியாக செய்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துவரம் பருப்பு கால் கப்
  2. தக்காளி ஒன்று
  3. பச்சை மிளகாய் ஒன்று
  4. சீரகம் அரை தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  6. உப்பு அரை தேக்கரண்டி
  7. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  8. அப்படியே அரைக்க தேவையானவை
  9. தேங்காய் துருவல் 1/8 கப்
  10. பச்சை மிளகாய் ஒன்று
  11. சீரகம் அரை தேக்கரண்டி
  12. தாளிக்க தேவையானவை
  13. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  14. கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் தலா அரை தேக்கரண்டி
  15. மிளகாய்வற்றல் 1
  16. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  17. பெருங்காயம் கால் தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பருப்பு தக்காளி பச்சை மிளகாய் மஞ்சள் பொடி உப்பு சீரகம் ஒரு கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் பேனில் வேகவைக்கவும்
  2. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்
  3. பிரஷர்பேன் திறந்து அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்