BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மிளகு குழம்பு

Photo of Pepper kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
0
0
0(0)
0

மிளகு குழம்பு

Nov-25-2018
Krishnasamy Vidya Valli
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மிளகு குழம்பு செய்முறை பற்றி

நல்ல விருந்து சாப்பாட்டிற்கு அடுத்தநாள் இந்த குழம்பு செய்வது வழக்கம். சீக்கிரம் கெட்டு போகாது. காரத்திற்கு மிளகு மட்டுமே சேர்க்கப்படுகிறது. வாரம் ஒரு முறை கூட செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • ఉడికించాలి
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புளி பாதி நெல்லிக்காய் அளவு
  2. உப்பு 1/4 தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  4. வெல்லம் ஒரு சிறிய துண்டு
  5. வறுத்து அரைக்க தேவையானவை
  6. தேங்காய் எண்ணெய் இரண்டு சொட்டுகள்
  7. துவரம் பருப்பு ஒன்றரை தேக்கரண்டி
  8. கொத்தமல்லி விதை அரை தேக்கரண்டி
  9. உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
  10. மிளகு முக்கால் தேக்கரண்டி
  11. கட்டிப் பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  12. கருவேப்பிலை ஒரு ஆர்க்கு
  13. தாளிக்க தேவையானவை
  14. தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி
  15. கடுகு வெந்தயம் சீரகம் தலா கால் தேக்கரண்டி
  16. கருவேப்பிலை ஒரு ஆர்க்கு
  17. பெருங்காயம் ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. வறுத்து அரைக்க கொடுத்தவற்றை வறுத்து தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து புளியை கரைத்து சேர்க்கவும்
  3. உப்பு மஞ்சள் பொடி வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்
  4. பச்சை வாசனை போனவுடன் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும்
  5. குழம்பு கெட்டியாகி முதலில் விட்ட எண்ணெய் மேலே வரும் வரை கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்