வீடு / சமையல் குறிப்பு / கருவேப்பிலை ரஸம்

Photo of Curry leaves rasam by Krishnasamy Vidya Valli at BetterButter
530
0
0.0(0)
0

கருவேப்பிலை ரஸம்

Nov-25-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கருவேப்பிலை ரஸம் செய்முறை பற்றி

எளிதில் செய்யலாம் ஆரோக்யமான இந்த ரஸம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புளி பாதி எலுமிச்சை அளவு
  2. தக்காளி ஒன்று அல்லது இரண்டு
  3. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  4. உப்பு அரை தேக்கரண்டி
  5. வெல்லம் ஒரு சிறிய துண்டு
  6. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை 1/2 தேக்கரண்டி(விருப்பப்பட்டால் மட்டும்)
  7. வறுத்து பொடி செய்ய தேவையானவை
  8. துவரம் பருப்பு ஒரு தேக்கரண்டி
  9. கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி
  10. கட்டிப் பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  11. மிளகாய்வற்றல் 1 அல்லது 2
  12. மிளகு சீரகம் தலா கால் தேக்கரண்டி
  13. கருவேப்பிலை 1/8 கப்
  14. தாளிக்க தேவையானவை
  15. நெய் ஒரு தேக்கரண்டி
  16. கடுகு அரை தேக்கரண்டி
  17. மிளகு சீரகம் தலா கால் தேக்கரண்டி ஒன்றிரண்டாகத் தட்டி சேர்க்கவும்
  18. மிளகாய்வற்றல் 1
  19. கருவேப்பிலை ஒரு ஆர்க்கு
  20. பெருங்காயம் ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. வறுத்துத் திரிக்க கொடுத்தவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  2. கடாயில் புளியை கரைத்து சேர்த்து தக்காளி உப்பு மஞ்சள் பொடி வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்
  3. பச்சை வாசனை போனவுடன் வறுத்துப் பொடித்த பொடி சேர்த்து கொதிக்கவிடவும்
  4. தளதளவென கொதிக்க தேவையில்லை நுரைத்து பொங்கும் நேரத்தில் அடுப்பை அணைத்து விடவும்
  5. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்