வீடு / சமையல் குறிப்பு / நோ ஆனியன் நோ கார்லிக் பூரிக்கான மசாலா

Photo of No onion no garlic masala for puri by Krishnasamy Vidya Valli at BetterButter
340
1
5.0(0)
0

நோ ஆனியன் நோ கார்லிக் பூரிக்கான மசாலா

Nov-26-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நோ ஆனியன் நோ கார்லிக் பூரிக்கான மசாலா செய்முறை பற்றி

பண்டிகை விரத நாட்களுக்கு ஏற்ற பூரிக்கான சைட்டிஷ் இது. தோசை இட்லிக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு 4 பெரியது
  2. தக்காளி- 2 அல்லது 3
  3. உப்பு ஒரு தேக்கரண்டி
  4. கடலை மாவு ஒரு மேசைக்கரண்டி
  5. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  6. காஷ்மீர் சில்லி பவுடர் அரை தேக்கரண்டி
  7. தாளிக்க தேவையானவை
  8. எண்ணெய் இரண்டு தேக்கரண்டி
  9. கடுகு உளுத்தம் பருப்பு தலா ஒரு தேக்கரண்டி
  10. பச்சை மிளகாய் 2 அல்லது 3 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  11. கருவேப்பிலை 3 ஆர்க்கு
  12. பெருங்காயம் 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. உப்பு மஞ்சள் பொடி காஷ்மீரி சில்லி பவுடர் சேர்த்து வதக்கவும்
  4. வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்
  5. கடலை மாவை தண்ணீர் விட்டு கரைத்து சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  6. பூரியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்