வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் கிரேவி

Photo of Chicken Gravy by Sumaiya shafi at BetterButter
303
0
0.0(0)
0

சிக்கன் கிரேவி

Nov-26-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் கிரேவி செய்முறை பற்றி

சிக்கன் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன் 500 கிராம்
  2. தயிர் கால் கப்
  3. பச்சைமிளகாய்-2
  4. தக்காளி 1
  5. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  6. பட்டை-1
  7. லவங்கம்-3
  8. ஏலக்காய்-2
  9. சிவப்பு மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
  10. குழம்பு மிளகாய் 2 டீஸ்பூன்
  11. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  12. முருங்கைக்காய் 1
  13. தேங்காய்ப்பால் ஓரு கப்
  14. நெய் மற்றும் எண்ணெயை

வழிமுறைகள்

  1. முதலில் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து ஊற்றவும்
  2. சிக்கனை தயிர் உப்பு மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்
  3. குக்கரில் பட்டை லவங்கம் ஏலக்காய்,பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  5. இரண்டு நிமிடம் கழித்து தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. அதில் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து பின் ஊற வைத்த சிக்கனை போட்டு கிளறி விடவும்.
  7. தேங்காய் பால் சேர்த்து குக்கரை மூடி போட்டு ஒரு விசில் வரை விடவும்
  8. பின் அதை திறந்து முருங்கைக்காய் போட்டு மறுபடியும் இரண்டு விசில் போட்டு எடுக்கவும்.
  9. சுவையான சிக்கன் கிரேவி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்