வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி துவையல்

Photo of Coriander Thuvayal by Sowmya Sundar at BetterButter
231
0
0.0(0)
0

கொத்தமல்லி துவையல்

Nov-26-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி துவையல் செய்முறை பற்றி

கொத்தமல்லியில் செய்த பாரம்பரியமான ட்ரை துவையல் இது. அக்காலத்தில் பயணங்களுக்கு எடுத்து செல்வார்கள்.தண்ணீர் இல்லாமல் அரைப்பதால் இரண்டு மூன்று நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொத்தமல்லி தழை கட்டு 2
  2. உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  3. கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  4. மிளகாய் வற்றல் 10
  5. மிளகு 1 டீஸ்பூன்
  6. புளி 1 நெல்லிக்காய் அளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. பெருங்காயம் 1 துண்டு
  9. எண்ணெய் 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் வற்றல் ,மிளகு, புளி, பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. கொத்தமல்லியை ஆய்ந்து அலசி வைத்து கொள்ளவும்
  3. பின் அதே கடாயில் மேலும் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு கொத்தமல்லி தழை சேர்த்து லேசாக வதக்கவும்
  4. மிக்சியில் முதலில் வறுத்தை சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து பின் அதனுடன் உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து பொடித்து கொள்ளவும்
  5. ட்ரை கொத்தமல்லி துவையல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்