வீடு / சமையல் குறிப்பு / ஸ்பெஷல் காம்போ சிறு விருந்து

Photo of Special Combo food by pavumidha arif at BetterButter
1123
1
5.0(0)
0

ஸ்பெஷல் காம்போ சிறு விருந்து

Nov-26-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்பெஷல் காம்போ சிறு விருந்து செய்முறை பற்றி

திடீர் வரும் விருந்தினர்களாக உடனடி விருந்து. லெமன் முந்திரி சாதம்,சிக்கன் வெங்காயம் ப்ரை,மட்டன் மிளகு சூப்,சிக்கன் கிரேவி,அப்பளம்,சாதம் 30 நிமிடத்தில் தயார்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. லெமன் முந்திரி சாதம் ::;;
  2. லெமன் 2
  3. முந்திரி பருப்பு 10
  4. சாதம் 2 கப்
  5. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  6. கருவேப்பிலை சிறிது
  7. கடுகு 1/2 டீஸ்பூன்
  8. உழுந்து பருப்பு 1/2 டீஸ்பூன்
  9. காய்ந்த மிளகாய் 2
  10. கடலை பருப்பு 1/2 டீஸ்பூன்
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. சிக்கன் ப்ரை :::
  13. வெங்காயம் 1
  14. கருவேப்பிலை சிறிது
  15. சிக்கன் 1/2 கப்
  16. சிக்கன் பொடி 2 டீஸ்பூன்
  17. உப்பு தேவையான அளவு
  18. மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
  19. மட்டன் மிளகு சூப்:::::
  20. மட்டன் எலும்பு 1/2 கப்
  21. வெங்காயம் 2
  22. மிளகு தூள் 1/2 டீஸ்பூன்
  23. தக்காளி 1/2
  24. பூண்டு 5
  25. சீரகம் 1 டீஸ்பூன்
  26. எண்ணெய் தேவையான அளவு
  27. மல்லி தூள் 2 டீஸ்பூன்
  28. பட்டை 1/2
  29. ஏலக்காய் 1
  30. கிராம்பு 1
  31. உப்பு தேவையான அளவு
  32. சிக்கன் கிரேவி::::::
  33. சிக்கன் 1/2 கப்
  34. வெங்காயம் 1
  35. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  36. தக்காளி 1
  37. மல்லி தூள் 1 மற்றும் 1/2 டீஸ்பூன்
  38. மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
  39. உப்பு தேவையான அளவு
  40. சாதம்::::
  41. அரிசி 1 கப்
  42. தண்ணீர் 2 கப்
  43. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. லெமன் முந்திரி சாதம் தயாரிக்க:::(10 நிமிடம்)
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து சேர்த்து கொள்ளவும்.
  3. லெமனை பிளிந்து விதை நீக்கி தனியாக வைக்கவும்
  4. இதனுடன் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, முந்திரி பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்
  5. பின்னர் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பின்னர் லெமன் சாறு சேர்த்து கொள்ளவும்
  6. இப்போது சாதம் சேர்த்து நன்றாக கிளறவும். நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும்
  7. சுவையான லெமன் சாதம் தயார்
  8. அப்பளம்::
  9. கடாயில் எண்ணெய் ஊற்றி அப்பளத்தை பொரித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து கொள்ளவும்.
  10. சிக்கன் ப்ரை::; (5 நிமிடம்)
  11. ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளை சேர்த்து கொள்ளவும்
  12. இதனுடன் உப்பு, சிக்கன் பொடி மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும். இதனை 3 நிமிடம் ஊற வைக்கவும்
  13. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்
  14. அதே கடாயில் வெங்காயம் போட்டு நன்றாக வறுத்து அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  15. சுவையான சிக்கன் ப்ரை தயார். சிறிது வெங்காயம்,கருவேப்பிலை மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும்
  16. சிக்கன் கிரேவி மற்றும் மட்டன் சூப் ::(15 நிமிடம்)
  17. சிக்கன் கிரேவி செய்ய::குக்கரில் வெங்காயம் நறுக்கி போடவும்.
  18. பின் அதனுடன் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது,கருவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும்
  19. இதனுடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து உப்பு, சிக்கன் பொடி, மல்லி தூள் சேர்த்து கிளறவும்.
  20. இதனை 4 விசில் வைத்து இறக்கினால் சுவையான சிக்கன் கிரேவி தயார்
  21. மட்டன் சூப் செய்வதற்கு::குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி கொள்ளவும்
  22. பின்னர் மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, பட்டை,கிராம்பு, ஏலக்காய், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  23. அரைத்த விழுது குக்கரில் சேர்த்து தக்காளி மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
  24. பின்னர் உப்பு மற்றும் மட்டன் துண்டு சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி 7 விசில் வந்ததும் இறக்கவும்
  25. சுவையான மட்டன் சூப் தயார்
  26. விருந்தாளிகளுக்கு ஏற்ற சுவையான அவசர உணவு விருந்து 30 நிமிடத்தில் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்