வீடு / சமையல் குறிப்பு / காளான் பச்சைப் பட்டாணி பிரியாணி

Photo of Mushroom and Green peas Biryani by Sreeja Arun at BetterButter
2164
10
5.0(0)
0

காளான் பச்சைப் பட்டாணி பிரியாணி

Jul-21-2016
Sreeja Arun
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை பட்டன் காளான் துண்டாக்கப்பட்டது 1 கப்
  2. புடைக்கப்பட்டப் புதிய பச்சைப் பட்டாணி 1 கப்
  3. வெங்காயம் நடுத்தர அளவிலானது 2
  4. தக்காளி சிறியது 1
  5. பச்சை மிளகாய் 5
  6. இஞ்சிப் பூண்டு விழுது 2 தேக்கரண்டி
  7. நறுக்கப்பட்ட கொத்துமல்லி 1/4 கப்
  8. நறுக்கப்பட்ட புதினா இலைகள் 1/4 கப்
  9. சிவப்பு மிளகாய்த் தூள் 1/2 தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  11. ஒட்டுமொத்த மசாலா உங்கள் விருப்பம்போல்
  12. பெருஞ்சீரகம் 1/2 தேக்கரண்டி
  13. பிரிஞ்சி இலை 1
  14. எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
  15. சீரக சம்பா அரிசி 1 கப்
  16. உப்பு சுவைக்கு
  17. எண்ணெய்/நெய் 2-4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெலிதாக வெங்காயத்தையும். தக்காளியை சதுரமாகச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்
  2. பச்சை மிளகாயைப் பிளந்து விதைகளை நீக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அரிசியை வேகவைப்பதற்கு:
  4. அரிசியைக் கழுவி 20ல் இருந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  5. அரிசியில் இருந்து தண்ணீரை வடிக்கட்டி ஒரு பிரஷர் குக்கரில் சேர்த்துக்கொள்ளவும்.
  6. இந்த அரிசியும் புடைத்த பச்சைப்பட்டாணி, ஒட்டுமொத்த மசாலாக்கள் (கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர சோம்பு, இலவங்கப்பட்டை உங்கள் சுவைக்கு ஏற்றவாறு) மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறையும் சேர்த்துக்கொள்ளவும்.
  7. மேலும் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து கொஞ்சம் உப்பும் சேர்த்து அரிசியை 1 விசிலுக்கு பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். குறிப்பு: 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.
  8. காளான் மசாலாவுக்கு:
  9. ஒரு கனமான அடிப்பாகமுள்ள கடாயில், 2 தேக்கரண்டி நெய் எடுத்து பெருஞ்சீரகத்தையும் வெங்காயத்தையும் பளபளப்பாக வரும்வரை வதக்கவும்.
  10. பச்சை மிளகாய், இஞ்சிப் பூண்டு விழுது, நறுக்கிய மூலிகைகளை மேலுள்ளவற்றில் சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.
  11. தக்காளி சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ளவும்.
  12. இறுதியாக சதுரமான காளானையும் சுவைக்கான உப்பையும் சேர்த்து மசாலா அடர்த்தியாகிக் கொஞ்சம் உலரும் வரை வதக்கவும்.
  13. இவற்றோது சாதத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மசாலாவையும் சேர்த்துச் சமமாகக் கலக்கவும். பொருள்களை மெதுவாக கலக்கவும், பட்டாணியை மசிக்கவேண்டாம்.
  14. இறுதியாக மீதமுள்ள 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறைச் சேர்த்து மெதுவாக கலக்கவும்.
  15. ரைத்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்