வீடு / சமையல் குறிப்பு / அப்பள கோனில் பனீர் சாட்

Photo of Papad Cone Paneer Chat by Sowmya Sundar at BetterButter
540
1
0.0(0)
0

அப்பள கோனில் பனீர் சாட்

Nov-26-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அப்பள கோனில் பனீர் சாட் செய்முறை பற்றி

மாலை வேளையில் பசியுடன் வரும் குழந்தைகளுக்கு சட்டென செய்து தரலாம் பனீர் சாட். அப்பளத்தை கோன் போன்று மடித்து அதில் வைத்து தருவதால் அதோடு சாப்பிட வித்யாசமாகவும் இருக்கும்.துளியும் எண்ணெய் இல்லாததால் பெரியவர்களுக்கும் ஏற்ற சாட் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃப்யூஷன்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பனீர் துண்டுகள் 1/2 கப்
  2. பாப்பட்/ அப்பளம் 2
  3. பெரிய வெங்காயம் 1
  4. தக்காளி 1
  5. வெள்ளரிக்காய் 1
  6. வறுத்த வேர்கடலை 2 டேபிள் ஸ்பூன்
  7. பொரி 1/4 கப்
  8. உப்பு தேவையான அளவு
  9. மிளகு தூள் 1/4 டீஸ்பூன்
  10. சாட் மசாலா 1/2 டீஸ்பூன்
  11. சீரக தூள் 1/4 டீஸ்பூன்
  12. எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்
  13. கொத்தமல்லி தழை 1/8 கப்

வழிமுறைகள்

  1. காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பனீரை வெந்நீரில் போட்டு எடுத்துவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.இப்படி செய்தால் பனீர் மிருதுவாக இருக்கும்.
  2. ஒரு பாத்திரத்தில் அப்பளம் தவிர கொடுத்துள்ள அனைத்து பொருட்களும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  3. அப்பளத்தை இரண்டு துண்டாக சரிபாதியாக கட் செய்து கொள்ளவும். தோசைகல்லை சூடாக்கி அப்பள துண்டை வைத்து ஒரு துணியால் அழுத்தம் கொடுத்து இரண்டு பக்கமும் திருப்பி போட்டு நன்றாக பொரிய விடவும் .
  4. சூடாக இருக்கும் போதே ஒரு துணியின் உதவியுடன் உடனடியாக அப்பளத்தை முக்கோண வடிவில் சுருட்டி அப்படியே சில வினாடிகள் பிடித்து கொள்ளவும்.இப்படி செய்தால் ஆறியதும் வடிவம் மாறாமல் அப்படியே இருக்கும்.
  5. இதேபோல் அனைத்தையும் செய்து கொள்ளவும்.கோன் மற்றும் ஸ்டஃப்பிங் ரெடி.
  6. இப்போது ஒவ்வொரு அப்பள கோனிலும் பனீர் சாட் நிரப்பி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்