வீடு / சமையல் குறிப்பு / தினைபனங்கற்கண்டு பொங்கல்

Photo of THINAI PANANKARKANDU PONGAL by Radha Balu at BetterButter
413
3
0.0(0)
0

தினைபனங்கற்கண்டு பொங்கல்

Nov-26-2018
Radha Balu
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தினைபனங்கற்கண்டு பொங்கல் செய்முறை பற்றி

இது சிறுதானியத்தில் செய்யும் இனிப்பு பொங்கல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தினை - 1 கப்  
  2. பயத்தம்பருப்பு- ¼ கப், 
  3. பனங்கற்கண்டு -1 கப்
  4. கல்கண்டு - ½ கப்
  5. பால்- 1 கப் 
  6. தேங்காய்ப்பால் - ½ கப்
  7. நெய் - ½ கப்
  8. ஏலக்காய்பொடி- 2தேக்கரண்டி 
  9. மிந்திரி பருப்பு- 10
  10. திராட்சை - 10 
  11. பாதாம் - 10 
  12. சிறியதாக நறுக்கிய ஆப்பிள், ஆரஞ்சு,மாதுளை, பேரிச்சை பழத் துண்டுகள் -  1 கப்
  13. குங்குமப்பூ - சில இதழ்கள் 

வழிமுறைகள்

  1. தினையை வெறும் வாணலியில் வாசனைவர வறுக்கவும். பயத்தம்பருப்பையும் சற்று வறுத்து இரண்டையும் களைந்து குக்கரில் பாலுடன் 1½ கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.5விசில் வந்ததும் அணைத்து விடவும்.
  2. வெளியில் எடுத்து கரண்டியால் மசித்து அத்துடன் தேங்காய்ப்பாலை சேர்த்து அடுப்பில் வைத்து அடி பிடிக்காமல் கிளறவும்.
  3. பனங்கற்கண்டு மற்றும் வெள்ளைக் கல்கண்டை பொடியாக்கி அத்துடன் சேர்த்துக் கிளறவும்.
  4. மிந்திரி, பாதாமை சிறு துண்டுகளாக்கவும். ¼ கப் நெய்யை சுடவைத்து அதில் மிந்திரி, பாதாம்,திராட்சையை வறுத்து பொங்கலில் சேர்க்கவும்.
  5. மீதமுள்ள நெய்யில் பழத்துண்டுகளை 2நிமிடம் வதக்கி அத்துடன் சேர்த்து கிளறவும். ஏலப்பொடி,குங்குமப்பூவை சேர்க்கவும். சுவையான தினைப் பொங்கல் தயார்! 

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்