வீடு / சமையல் குறிப்பு / கோதுமை பரோட்டா,தால்,இன்ஸ்டண்ட் கோபி ப்ரை.

Photo of Wheat parotta,dal& gobi fry by Asiya Omar at BetterButter
391
0
0.0(0)
0

கோதுமை பரோட்டா,தால்,இன்ஸ்டண்ட் கோபி ப்ரை.

Nov-27-2018
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோதுமை பரோட்டா,தால்,இன்ஸ்டண்ட் கோபி ப்ரை. செய்முறை பற்றி

அரை மணியில் நிச்சயம் செய்து அசத்தும் டின்னர் ஸ்பெஷல்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை பரோட்டாவிற்கு :-
  2. கோதுமை மாவு -1/4 கிலோ
  3. வெது வெதுப்பான நீர் -தேவைக்கு
  4. சீனி - கால் தேக்கரண்டி
  5. எண்ணெய் 4-5 தேக்கரண்டி
  6. உப்பு - சுவைக்கு
  7. தால் செய்ய:-
  8. வேக வைக்க:-
  9. பாசி பருப்பு(சிறு பருப்பு) - 50 கிராம்
  10. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  11. சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
  12. மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
  13. பச்சை மிளகாய் -1
  14. சிறிய தக்காளி -1
  15. சிறிய வெங்காயம் -1
  16. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  17. மல்லி இலை -சிறிது
  18. தாளிக்க எண்ணெய் +நெய் -1+1/தேக்கரண்டி
  19. கடுகு - 1/2 தேக்கரண்டி
  20. கருவேப்பிலை -1 இணுக்கு.
  21. நறுக்கிய வெங்காயம் - சிறிது
  22. கோபி ப்ரை:-
  23. காலிப்ளவர் பிரித்த பூக்கள்- கால் கிலோ
  24. இஞ்சி பூண்டு -1 தேக்கரண்டி
  25. மிளகாய்த்தூள் -1/2 -1 தேக்கரண்டி
  26. கரம் மசாலா - கால் தேக்கரண்டி
  27. உப்பு சுவைக்கு
  28. பஜ்ஜி அல்லது போண்டா மிக்ஸ் - 4 மேஜைக்கரண்டி
  29. ( இல்லையென்றால் கடலை மாவு3 மே.க,அரிசி மாவு 1 மே.க.)
  30. எண்ணெய் பொரிக்க - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. முதலில் வெந்நீர் கொதிக்க விடவும். ஒரு பாத்திரத்தில் தேவைக்கு கோதுமை மாவு,உப்பு,சீனி சேர்த்து கொதிநீர் சிறிது,தண்ணீர் சிறிது கலந்து பிசைந்து மூடி வைக்கவும்.
  2. பாசி பருப்பு வேக வைக்க மேற்சொன்ன பொருட்கள்,கொதி நீர் சேர்த்து மூடி 2 விசில் விடவும்.வெந்தவுடன் திறந்து உப்பு சேர்த்து அகப்பையால் மசிக்கவும்.
  3. பின்பு தாளித்து கொட்டவும்.நறுக்கிய மல்லி இலை தூவினால் தால் தயார்.
  4. பாத்திரத்தில் காலிப்ளவர் துண்டுகள் வெந்நீரில் போட்டு வைக்கவும். 5 நிமிடம் கழித்து வடிகட்டி,மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு,கரம் மசாலா உப்பு தூவி விடவும்.
  5. கலந்து 10 நிமிடம் ஊற விடவும்.
  6. அடுத்து போண்டா மிக்ஸ் சேர்க்கவும்.
  7. விரவி வைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.இறுகலாக இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து விரவலாம்.
  8. எண்ணெய் சூடானவுடன் பொரிக்கலாம்
  9. பொன்னிறமானதும் எண்ணெய் வடித்து எடுக்கவும்.
  10. இன்ஸ்டண்ட் கோபி ப்ரை தயார்.
  11. அடுத்து கோதுமை மாவில் உருண்டை பிரித்து ,பரத்தி மடிப்பு வைத்து சுற்றி வைக்கவும்.
  12. வட்டமாக பரத்தி எடுக்கவும்.
  13. இருபுறமும் லேசாக எண்ணெய் தடவி சுட்டு எடுக்கவும்.
  14. கோதுமை பரோட்டா தயார்.கால் கிலோ மாவிற்கு ஆறு எண்ணம் வரும்.
  15. கோதுமை பரோட்டா, தால்,கோபி ப்ரை தயார்.லஞ்ச் அல்லது டின்னருக்கு இந்த கோம்போ செமையாக இருக்கும் .அரை மணியில் நிச்சயமாய் எல்லாம் தயாராய் இருந்தால் மூன்று அடுப்பில் முடித்து விடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்