வீடு / சமையல் குறிப்பு / சோயா முட்டை வறுவல்

Photo of Soya egg fry by Rachell Revathi Samuel at BetterButter
558
1
0.0(0)
0

சோயா முட்டை வறுவல்

Nov-27-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சோயா முட்டை வறுவல் செய்முறை பற்றி

புரதம் மிகுந்த முட்டை மற்றும் சோயா சேர்த்து செய்யப்படும் வறுவல்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சோயா 1/2 கப்
  2. எண்ணெய் 2 ஸ்பூன்
  3. கடுகு 1/4 ஸ்பூன்
  4. வெங்காயம் 1
  5. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  6. தக்காளி 1
  7. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  8. கரம் மசாலா 1 ஸ்பூன்
  9. முட்டை 1
  10. மிளகு சீரகத்தூள் 1 ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சோயாவை சுடு தண்ணீரில் 3-5 போட்டு எடுக்கவும்.
  2. தண்ணீரை வடிகட்டி பிழிந்து எடுத்து கொள்ளவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
  7. சோயாவை சேர்த்து வதக்கவும் க்ஷ
  8. சோயாவில் மசாலா ஏறும் வரை நன்றாக கிளறவும்.
  9. மூட்டை உடைத்து ஊற்றவும். மிளகு சீரகத்தூள் உப்பு சேர்க்கவும்.
  10. நன்றாக கலந்து விடவும்.
  11. முட்டை வெந்ததும் இறக்கவும்..
  12. சுவையான சோயா முட்டை வறுவல் தயார்.
  13. இந்த சோயா முட்டை வறுவல் செய்ய 15-20 நிமிடங்கள் ஆகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்