வீடு / சமையல் குறிப்பு / மீன் குழம்பு

Photo of Fish Gravy by Sumaiya shafi at BetterButter
342
0
0.0(0)
0

மீன் குழம்பு

Nov-27-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மீன் குழம்பு செய்முறை பற்றி

மீன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • மெயின் டிஷ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மீன் அரை கிலோ
  2. கடுகு சீரகம் வெந்தயம் உளுத்தம்பருப்பு தாளிக்க
  3. கருவேப்பிலை 2
  4. பச்சைமிளகாய்-2
  5. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  6. தக்காளி-1
  7. பூண்டு-1முழுசாக
  8. புளி-2 எலுமிச்சை அளவு உருண்டை
  9. தேங்காய் அரைமூடி அரைத்தது
  10. உப்பு தேவையான அளவு
  11. குழம்பு மிளகாய் தூள்-3 டேபிள்ஸ்பூன்
  12. சிவப்பு மிளகாய் தூள்-1டீஸ்பூன்
  13. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  14. மல்லி இலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு கனத்த பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு வெந்தயம் ,உளுத்தம்பருப்பு ,சீரகம் சேர்க்கவும்
  2. பின் கருவேப்பிலை, பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து 2 முதல் 3 நிமிடம் வதக்கவும்
  4. பின் சிவப்பு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
  5. புளியை 4 கப் தண்ணீரில் ஊற வைத்து பின் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  6. பிசைந்த புளித்தண்ணீரில் குழம்பு மிளகாய்த்தூள்,உப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலக்கவும்.
  7. இதை தாளிப்பில் ஊற்றவும்
  8. 10 நிமிடம் கொதித்த பின் மீனை அதில் சேர்க்கவும்
  9. மீன் வெந்து எண்ணெய் விடும் சமயத்தில் அடுப்பை ஆப் செய்யவும்
  10. சுவையான மீன் குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்