வீடு / சமையல் குறிப்பு / சோயா ஃபிரைட் ரைஸ்

Photo of Soya fried rice by Rachell Revathi Samuel at BetterButter
494
2
0.0(0)
0

சோயா ஃபிரைட் ரைஸ்

Nov-27-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சோயா ஃபிரைட் ரைஸ் செய்முறை பற்றி

புரோட்டின் ரிச் சோயாவில் செய்யப்படும் ஃபிரைட் ரைஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சோயா பொரிக்க: சோயா 1/2கப்
  2. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  3. இஞ்சி பூண்டு விழுது 1/4 ஸ்பூன்
  4. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  5. தயிர் 2 ஸ்பூன்
  6. சோளமாவு 2 ஸ்பூன்
  7. அரிசி மாவு 1 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் பொரிக்க
  10. தாளிக்க: எண்ணெய் 2 ஸ்பூன்
  11. கடுகு 1/2 ஸ்பூன்
  12. வெங்காயம் 1
  13. கருவேப்பிலை சிறிது
  14. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  15. சாதம் 1 கப்
  16. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  17. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சோயாவை சுடு தண்ணீரில் 2-3 நிமிடங்கள் போட்டு வைக்கவும்.
  2. சோயாவை தண்ணீர் வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
  3. மிளகாய்த்தூள் கரம் மசாலா இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  4. தயிர் அரிசி மாவு சோளமாவு சேர்க்கவும்.
  5. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோயா உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  7. பொரித்த சோயா உருண்டைகள்
  8. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  9. வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  10. சாதம் சேர்த்து கிளறவும்.
  11. பொரித்த சோயா உருண்டைகளை சேர்க்கவும்.
  12. கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறவும்.
  13. 1 நிமிடம் நன்றாக கிளறி இறக்கவும்.
  14. சுவையான சோயா ஃபிரைட் ரைஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்