வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் பாட் பட்டர் சிக்கன் 65 பிரியாணி

Photo of Instant pot butter chicken 65 biriyani by Pinky Srini at BetterButter
0
1
0(0)
0

இன்ஸ்டன்ட் பாட் பட்டர் சிக்கன் 65 பிரியாணி

Nov-27-2018
Pinky Srini
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் பாட் பட்டர் சிக்கன் 65 பிரியாணி செய்முறை பற்றி

எளிதாக நம் வீட்டு சாமங்கள் கொண்டு செய்யும் சிக்கன் 65 துண்டுகள் , பட்டர் சிக்கன் கலவையில் கலந்து செய்த உடனடி ஹோட்டல் ஸ்டைல் பிரியாணி !!

செய்முறை டாக்ஸ்

 • నాన్ వెజ్
 • మీడియం/మధ్యస్థ
 • ప్రతి రోజు
 • ఉత్తర భారతీయ
 • చిన్న మంట పై ఉడికించటం
 • ప్రెజర్ కుక్
 • ఉడికించాలి
 • వేయించేవి
 • మితముగా వేయించుట
 • ప్రధాన వంటకం
 • పీచుపదార్థాలు ఘనంగా ఉన్నవి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. சிக்கன் 65 செய்ய :
 2. பொரிக்க தேவையான எண்ணெய்
 3. அஜினோமோட்டோ தேவை என்றால் 1பிஞ்ச்
 4. சிகப்பு கலர் பொடி தேவையென்றால் 1பிஞ்ச்
 5. இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன்
 6. உப்பு தேவையான அளவு
 7. மைதா 1/2 டீஸ்பூன்
 8. எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன்
 9. கான்பிளவர் 2டேபிள்ஸ்பூன்
 10. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
 11. மல்லிப் பொடி ஒரு டீஸ்பூன்
 12. காஷ்மீரி மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
 13. தந்தூரி சிக்கன் பவுடர் ஒரு தேக்கரண்டி
 14. பிரியாணி செய்ய தேவையான
 15. பாஸ்மதி அரிசி ஒரு கப்
 16. வறுத்த வெங்காயம் அரை கப் 1/4கப் +1/4கப்
 17. டொமேட்டோ ப்யூரி அரை கப்
 18. இஞ்சி ஒரு துண்டு
 19. அரை கட்டி பூண்டு (10)
 20. மிளகாய் பொடி அரை டீஸ்பூன்
 21. மல்லிப் பொடி ஒரு டீஸ்பூன்
 22. தந்தூரி சிக்கன் பவுடர் ஒரு டீஸ்பூன்
 23. பச்சைமிளகாய்-2
 24. வெண்ணை 3 டேபிள்ஸ்பூன்
 25. கிராம்பு- 2+1
 26. ஏலக்காய்- 1+1
 27. பட்டை ஒரு இன்ச்
 28. தயிர் 1 டேபிள்ஸ்பூன்
 29. முந்திரி 3
 30. கசூரி மேத்தி அரை தேக்கரண்டி
 31. அடுப்புக்கரி ஒரு துண்டு
 32. ஃப்ரெஷ் கிரீம் ஒரு டேபிள்ஸ்பூன்
 33. தண்ணீர் 1/2 கப்
 34. நறுக்கிய புதினா கால் கப்
 35. குங்குமப்பூ ஒரு பின்ச்
 36. நறுக்கிய கொத்தமல்லி கால் கப்
 37. நெய் ஒரு தேக்கரண்டி

வழிமுறைகள்

 1. முதலில் அரிசியை நன்றாக கழுவி ஊற வைத்துக் கொள்ளவும்
 2. பின் நீங்கள் எந்த அடுப்பை தொடர்ந்து பயன் படுத்த போகிறீர்களோ அதன் கீழ் கரி துண்டை வைத்து விடவும்
 3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்
 4. எண்ணெய் சுடியேரும் நேரத்தில் சிக்கன் 65 தேவையான அனைத்து மசாலாவை அதனுடன் சேர்த்து பிசறி வைக்கவும்
 5. மேலும் மிக்சி ஜாடியில் இஞ்சி, பூண்டு, முந்திரி, வறுத்த வெங்காயம்(1/8கப்) தக்காளி அரவை (இல்லை என்றால் 2 தக்காளி பழம் சேர்க்கலாம்),மிளகாய் பொடி, மல்லி பொடி, தந்தூரி சிக்கன் பவுடர்,தயிர் உப்பு, சிறிது சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
 6. இதற்கு பின் எண்ணெய் காய்ந்து இருக்கும் .அதில் சிக்கனை எண்ணெயில் இட்டுப் பொரித்து பொன் நிறமாக எடுக்கவும்
 7. அவை பொரியும் பொழுது ஒரு கடாயில் நெய் + வெண்ணெய்(தனியாக 1/2ஸ்பூன் எடுத்து வைக்கவும்) சேர்த்து, பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து பொரிய விடவும்
 8. பின் 1/8கப் வறுத்த வெங்காயம், சிறிது நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து அதனுடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
 9. இதற்கு நடுவில் அனைத்து சிக்கன் துண்டுகள் பொரிந்ததும் தனியாக எடுத்து வைத்து விடவும்
 10. அந்த காலியான அடுப்பில் சாதம் வேகவைக்க தண்ணீர் கொதிக்க வைக்கவும் (மீதம் உள்ள சாதம் என்றால் இதனை தவிர்க்கவும்)
 11. இப்பொழுது மசாலாவில் எண்ணெய் பிரிய தொடங்கும், அப்பொழுது கசூரி மேதி சேர்க்கவும்
 12. பின் வறுத்த சிக்கன், உப்பு சேர்த்து பிரட்டி 1/2கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு கிரீம் சேர்த்து இறக்கவும்
 13. கலவை மிக கெட்டியாக இருக்கும் என்று தோன்றினால் சிறிது பால் அல்லது தண்ணீர் சேர்த்து கொள்ளாலம்
 14. அதில் தயாரான கரி துண்டை கிராம்பு ஏலக்காய் நெய் சேர்த்து உடனடியாக மூடி விடவும்
 15. இப்பொழுது கொதிக்கும் நீரில் அரிசி ,உப்பு, பச்சை மிளகாயை சேர்த்து 80 % வேக வைத்து கொள்ளவும்
 16. கடைசியாக ஒரு குகெரில் அடியில் நெய் தடவி , மேலும் ஒரு தோசை கள்ளை சூடாக்கி தயாராக வைத்து கொள்ளவும்
 17. கூகேரில் வேக வைத்த அரிசி ( கொதி நிலையிலேயே இருத்து சேர்க்கலாம்) , டம்மில் இருக்கும் சிக்கன், கொத்தமல்லி,புதினா,வறுத்த வெங்காயம் என அடுக்கி மேலே மீதம் உள்ள வெண்ணெய், குங்கும பூ ,வறுத்த வெங்காயம் சேர்க்கவும்
 18. 2 நிமிடம் அதிக கணலில் வைத்து பின் தோசை கல்லில் 5நிமிடம் மிதமான அடுப்பில் வைத்து எடுக்கவும்
 19. குறிப்பு : நான் கடையில் வாங்கிய பொறித்த வெங்காயம் சேர்த்துளேன், மேலும் மீதம் உள்ள சாதம் கொண்டு செய்தாலும் சுவையில் எந்த ஒரு குறையும் இருக்காது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்