வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரை பொங்கல் மற்றும் வெண்பொங்கல்

Photo of Sweet pongal and ven pongal by Rachell Revathi Samuel at BetterButter
554
0
0.0(0)
0

சர்க்கரை பொங்கல் மற்றும் வெண்பொங்கல்

Nov-27-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சர்க்கரை பொங்கல் மற்றும் வெண்பொங்கல் செய்முறை பற்றி

30 நிமிடங்களில் 2 வகை பொங்கல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. அரிசி 1 கப்
  2. பாசிப்பருப்பு 1/3 கப்
  3. வெண்பொங்கல்: நெய் 2 ஸ்பூன்
  4. மிளகு 1 ஸ்பூன்
  5. சீரகம் 1 ஸ்பூன்
  6. பச்சை மிளகாய் 2
  7. கருவேப்பிலை சிறிது
  8. முந்திரி ‌5-10
  9. சர்க்கரை பொங்கல்: வெல்லம் 1/2 கப்
  10. ஏலக்காய் 1
  11. முந்திரி 5-10
  12. நெய் 2 ஸ்பூன்
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் அரிசி மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து எடுத்துக் கொள்ளவும்
  2. 2 மடங்கிற்கு அதிக அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.
  3. 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு கொள்ளவும்.குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கவும்.
  4. குக்கரில் வேக வைத்த அரிசி மற்றும் பருப்பை 2 பங்காக பிரித்து கொள்ளவும்.
  5. அடுப்பில் வாணலியை வைத்து வெல்லம் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
  6. வெல்லம் கரைந்ததும் அதில் குக்கரில் வேக வைத்த அரிசியில் பாதியை சேர்த்து கிளறவும்.
  7. ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி முந்திரியை வறுத்து கொள்ளவும்.
  8. வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் சேர்த்து கிளறவும்.நெய் 2 ஸ்பூன் ஊற்றி கிளறவும்.
  9. சுவையான சர்க்கரை பொங்கல் தயார்.
  10. அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு சீரகம் சேர்த்து வதக்கவும்.
  11. பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  12. தாளித்ததை 2 வது பங்கு வேகவைத்த அரிசி மற்றும் பருப்பில் சேர்க்கவும்.
  13. நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து கொள்ளவும்.
  14. சுவையான வெண்பொங்கல் மற்றும் சர்க்கரை பொங்கல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்