வீடு / சமையல் குறிப்பு / ஆலூ மச்சர் சுட்கி (பெங்காலி உருளைக் கருவாட்டுக் குழம்பு)

Photo of Aloo macher shutki. by Raihanathus Sahdhiyya at BetterButter
393
1
0.0(0)
0

ஆலூ மச்சர் சுட்கி (பெங்காலி உருளைக் கருவாட்டுக் குழம்பு)

Nov-27-2018
Raihanathus Sahdhiyya
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆலூ மச்சர் சுட்கி (பெங்காலி உருளைக் கருவாட்டுக் குழம்பு) செய்முறை பற்றி

பெங்கால், பங்களாதேசம் போன்ற இடங்களில் கருவாட்டுக் குழம்பில் உருளைக்கிழங்கு சேர்த்து அதிக காரமில்லாமல் செய்வார்கள். அதன் செய்முறை இதோ!

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மேற்கு வங்காளம்
  • ரோசஸ்டிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருவாடு (துண்டுகள்): 1 கப்
  2. உருக்கிழங்கு: 2
  3. வெங்காயம்: 1
  4. பூண்டு: 4 பல்
  5. மிளகாய்த்தூள்: 1/2 தேக்கரண்டி
  6. மல்லித்தூள்: 1/2 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள்: 1/4 தேக்கரண்டி
  8. உப்பு: தேவைக்கு
  9. எண்ணெய்: 2 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் கருவாட்டுத் துண்டுகளை 5 நிமிடம் வெண்ணீரில் போடவும். வெங்காயம் மற்றும் பூண்டை கொரகொரப்பாக விழுதாக்கிக் கொள்ளவும்
  2. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கருவாட்டு துண்டுகளை 1 நிமிடம் வறுத்தெஎடுக்கவும்.
  3. பின்பு அதே சட்டியில், அரைத்த வெங்காயப் பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
  4. நன்றாக வதங்கிய பின்னர் அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி அதில் உருளைத் துண்டுகள் சேர்க்கவும்
  5. இறுதியாக, வறுத்து வைத்துள்ள கருவாட்டு துண்டுகளையும் சேர்த்து பிரட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேவையெனில் உப்பு சேர்க்கவும்
  6. 12-15 நிமிடங்கள் கழித்து உருளைக் கிழங்கு வெந்த பின் சரிபார்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
  7. சுடச்சுட, சுவையான இந்த ஆலூ மச்செர் சுட்கியை அரிசி சோற்றுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்