வீடு / சமையல் குறிப்பு / முட்டைகோஸ் சாதம்

Photo of Cabbage rice by Rachell Revathi Samuel at BetterButter
210
1
0.0(0)
0

முட்டைகோஸ் சாதம்

Nov-27-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

முட்டைகோஸ் சாதம் செய்முறை பற்றி

எளிதாக செய்யக்கூடிய சாத வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. எண்ணெய் 2 ஸ்பூன்
  2. கடுகு 1/4 ஸ்பூன்
  3. முந்திரி 5-6
  4. கருவேப்பிலை சிறிது
  5. பச்சை மிளகாய் 1
  6. வெங்காயம் 1
  7. கேரட் 1
  8. முட்டைக்கோஸ் 1 கப்
  9. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  10. கரம் மசாலா 1 ஸ்பூன்
  11. சாதம் 1 கப்
  12. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கொள்ளவும்.
  2. முந்திரி கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் துருவிய கேரட் சேர்த்து வதக்கவும்.
  5. நறுக்கிய முட்டைக்கோஸ் சேர்த்து வதக்கவும்.
  6. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்
  7. சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக வேகவைத்து கொள்ளவும்.
  8. முட்டை கோஸ் வெந்ததும் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
  9. நன்றாக கலந்து கொள்ளவும்.
  10. சாதம் சேர்த்து கிளறவும்.
  11. தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  12. நன்றாக கிளறி இறக்கவும்.
  13. சுவையான முட்டைகோஸ் சாதம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்