வீடு / சமையல் குறிப்பு / பெங்காலி புலாவ்

Photo of Bengali pulao by Karuna pooja at BetterButter
231
1
0.0(0)
0

பெங்காலி புலாவ்

Nov-27-2018
Karuna pooja
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பெங்காலி புலாவ் செய்முறை பற்றி

பெங்காலி மாநிலத்தில் தயாரிக்கப்படும் புலவ். குழந்தைகளின் விருப்பமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • மகாராஷ்டிரம்
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உதிர் உதிராக வடித்த சாதம் 2 கப்
  2. பிரிஞ்சி இலை ஒன்று
  3. முந்திரி ஒரு டேபிள்ஸ்பூன்
  4. கிராம்பு-2
  5. திராட்சை ஒரு டேபிள்ஸ்பூன்
  6. பட்டை ஒரு சிறிய துண்டு
  7. மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் ஒன்று
  8. இஞ்சி விழுது ஒரு டீஸ்பூன்
  9. சர்க்கரை விரும்பினால் ஒரு ஸ்பூன்
  10. ஏலக்காய் ஒன்று
  11. பால் ஒரு டீஸ்பூன்
  12. குங்குமப்பூ இழைகள் சிறிதளவு
  13. எண்ணெய் சிறிதளவு
  14. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சாதத்தை உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு ஸ்பூன் பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும்
  3. சிறிதளவு எண்ணெயில் பட்டை கிராம்பு. ஏலக்காய் பிரிஞ்சி இலை சேர்க்கவும்
  4. திராட்சை முந்திரி ஆகியவற்றை சேர்க்கவும்
  5. இதனுடன் இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும்
  6. நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  7. வதங்கியதும் பாலில் ஊற வைத்த குங்குமப்பூவை சேர்த்து நன்கு வதக்கி
  8. உப்பு மற்றும் சாதம் சேர்த்து கலந்து இறக்கவும்
  9. ரிச்சான பெங்காலி புலாவ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்