வீடு / சமையல் குறிப்பு / மீன் மொய்லி

Photo of Meen moilee / molly by Raihanathus Sahdhiyya at BetterButter
429
3
0.0(0)
0

மீன் மொய்லி

Nov-27-2018
Raihanathus Sahdhiyya
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மீன் மொய்லி செய்முறை பற்றி

தென்னைக்கு புகழ் பெற்ற கேரளத்திலுருந்து ஒரு சுவையான, இதமான, அதிக காரமில்லாத மென்மையான தேங்காய்ப்பாலில் செய்யப்படும் குழம்பு தான் இந்த மீன் மொய்லி!! அப்பம், இடியப்பம், சோறு என அனைத்திற்கும் ஏற்றது மீன் மொய்லி...போர்த்துகீசியர்களின் வருகை கேரளத்தில் மிகுதியாக இருந்த காலத்தில் அவர்களுக்கென்று அதிக காரம் இல்லாமல் கேரள மக்களால் கண்டுபிடிக்கபட்ட உணவே இது!!

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • கேரளா
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மீனை ஊறவைக்க (மேரினேட்):
  2. நடுத்தரமான மீன்: 3 (துண்டுகளாக்கியது)
  3. எலுமிச்சைச் சாறு: 1 மேசைக்கரண்டி
  4. மஞ்சள் தூள்: 1/4 தேக்கரண்டி
  5. மிளகுத்தூள்: 1 தேக்கரண்டி
  6. உப்பு: தேவைக்கு
  7. குழம்பு செய்ய:
  8. தேங்காய் எண்ணெய் : 2 மேசைக்கரண்டி
  9. கடுகு: 1/4 தேக்கரண்டி
  10. கறிவேப்பிலை: 1 கொத்து
  11. இஞ்சி & பூண்டு (நறுக்கியது/விழுது) : தலா 1 தேக்கரண்டி
  12. கீறிய பச்சை மிளகாய்: 3
  13. நறுக்கிய வெங்காயம் : 2 (நடுத்தர அளவுள்ளது)
  14. தக்காளி: 2-3 (நறுக்கியது)
  15. முதல் & இரண்டாம் தேங்காய்ப்பால் : 1 கப்
  16. மூன்றாம் தேங்காய்ப்பால் : 1 கப்
  17. மஞ்சள் தூள்: 1/4 தேக்கரண்டி
  18. மிளகுத்தூள்: 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் மீன் துண்டுகளில் எலுமிச்சைச்சாறு,மஞ்சள் தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி ஊற வைக்கவும்
  2. தவாவில் எண்ணெய் ஊற்றி மீன் துண்டுகளை போட்டு பொரிக்கவும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பாதி வெந்தவுடன் எடுத்து விடவும்
  3. மண்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொறிந்ததும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்
  4. வெங்காயம் வெந்ததும் (பொன்னிறமாக தேவையில்லை) தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும் (தக்காளி குழைய கூடாது)
  5. அடுத்து மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்
  6. பின்னர் இரண்டாம் மற்றும் மூன்றாம் தேங்காய்ப்பால் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்
  7. பிறகு அதில் பொரித்த மீன் சேர்த்து குறைந்த தீயில் 8-10 நிமிடங்கள் வேக வைக்கவும். இடையில் கரண்டி பயன்படுத்தாமல் இலேசாக சட்டியை அசைத்து கலக்கி விடவும்
  8. இறுதியாக மண்சட்டியை அடுப்பிலிருந்து இறக்கி முதல் தேங்காய்ப்பால் சேர்த்து சிறிது கறிவேப்பிலைகள் தூவி பிறகு அடுப்பில் ஏற்றி 1 நிமிடம் மட்டும் குறைந்த தீயில் வைத்து இறுதியாக ஒரு முறை கலக்கி விட்டு அடுப்பை அணைக்கவும்
  9. சுவையான அதிக காரம் இல்லாத மணமான மீன் மொய்லி தயார்
  10. ஆப்பம், இடியாப்பம், சோறு என அனைத்திற்கும் ஏற்ற குழம்பு இது!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்