வீடு / சமையல் குறிப்பு / ஆம்லெட் கிரேவி

Photo of Omelet gravy by Rachell Revathi Samuel at BetterButter
227
1
0.0(0)
0

ஆம்லெட் கிரேவி

Nov-27-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஆம்லெட் கிரேவி செய்முறை பற்றி

எளிதாக செய்யக்கூடிய ஆம்லெட் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ஆம்லெட்: முட்டை 1
  2. எண்ணெய் 1 ஸ்பூன்
  3. வெங்காயம் 1
  4. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  5. உப்பு
  6. கிரேவி: எண்ணெய் 1 ஸ்பூன்
  7. வெங்காயம் 1
  8. கருவேப்பிலை சிறிது
  9. இஞ்சி பூண்டு விழுது 1/4 ஸ்பூன்
  10. தக்காளி 1
  11. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  12. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  13. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  14. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் வெங்காயம் பச்சை மிளகாய் மிளகாய் தூள் சேர்க்கவும். நன்றாக கலந்து கொள்ளவும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்
  3. எண்ணை காய்ந்ததும் கலந்து வைத்த முட்டையை அதில் ஊற்றவும்
  4. இருபுறமும் திருப்பி போட்டு வேக விடவும்
  5. ஆம்லெட்டை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போடவும்
  7. கடுகு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்க்கவும்
  8. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  9. நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
  10. தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
  11. சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்
  12. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த ஆம்லெட் துண்டுகளை சேர்க்கவும்
  13. இரண்டு நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கவும்
  14. சுவையான ஆம்லெட் கிரேவி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்