வீடு / சமையல் குறிப்பு / ரவை ஃபிரெஞ்சு ஃபிரை

Photo of Sujji French Fry by Rachell Revathi Samuel at BetterButter
290
1
0.0(0)
0

ரவை ஃபிரெஞ்சு ஃபிரை

Nov-27-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ரவை ஃபிரெஞ்சு ஃபிரை செய்முறை பற்றி

ரவையில் செய்யப்படும் ஃபிரெஞ்சு ஃபிரை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரெஞ்ச்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ரவை 1/2 கப்
  2. எண்ணெய் பொரிக்க
  3. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி அதில் ரவையை வேகவிடவும். ரவைக்கு 2 மடங்கு தண்ணீர் சேர்க்கவும்.
  2. ரவை வெந்து பார்த்துவிட்டு ஒட்டாமல் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
  3. ரவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்
  4. நன்றாக பிசைந்து கொள்ளவும்
  5. ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்
  6. நன்றாக பிசைந்து ரவை
  7. ஒரு பாலிதீன் கவரில் ரவை உருண்டை வைக்கவும்.
  8. கவரை மூடி சப்பாத்தி கட்டையால் தேய்த்துக் கொள்ளவும். (1/2 இன்ச் முதல் 1இன்ச் வரை thickness வைத்து கொள்ளவும்)
  9. கத்தியை வைத்து நீள நீளமாக வெட்டிக் கொள்ளவும்
  10. அதை சம பாகங்களாக வெட்டிக்கொள்ளவும்
  11. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்.
  12. பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  13. பொரித்து எடுத்த ரவை பிரெஞ்சு ஃபிரையில் மிளகாய்த்தூள் உப்பு தூவி கலந்து கொள்ளவும்.
  14. சுவையான மொறு மொறுவென்று இருக்கும் ரவை ஃபிரெஞ்சு ஃபிரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்