வீடு / சமையல் குறிப்பு / சோயா பீன்ஸ் மசாலா

Photo of Soya beans masal by hajirasheed haroon at BetterButter
508
1
0.0(0)
0

சோயா பீன்ஸ் மசாலா

Nov-27-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சோயா பீன்ஸ் மசாலா செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சோயா பீன்ஸ் 100 கிராம்
  2. வெங்காயம் நான்கு
  3. தக்காளி-2
  4. இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள்ஸ்பூன்
  5. தாளிப்பதற்கு கடுகு சோம்பு 1 டேபிள்ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  7. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  8. கரம்மசாலா 1 டேபிள்ஸ்பூன்
  9. தேங்காய் விழுது 2 டேபிள்ஸ்பூன்
  10. தேவையான அளவு உப்பு
  11. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சோயா பீன்ஸை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும்
  2. ஊற வைத்த சோயா பீன்ஸை குக்கரில் 3 விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. அதே குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. நன்கு வதங்கியதும் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும் பிறகு உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் வேக வைத்த சோயா பீன்ஸ் ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும் பிறகு தேங்காய் விழுது சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வேக வைத்து பரிமாறலாம்
  5. சுவையான சோயா பீன்ஸ் மசாலா தயார்
  6. சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்
  7. பீன்ஸ் ஊறவைத்த நேரத்தை நான் சேர்க்கவில்லை

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்