வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி முட்டை ஆம்லெட் குழம்பு

Photo of Spicy egg omblet Kulambu by hajirasheed haroon at BetterButter
266
1
0.0(0)
0

ஸ்பைசி முட்டை ஆம்லெட் குழம்பு

Nov-27-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி முட்டை ஆம்லெட் குழம்பு செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்
  2. வெங்காயம்-3
  3. தக்காளி-2
  4. பூண்டு 10 பல்
  5. கருவேப்பிலை ஒரு கொத்து
  6. கடுகு உளுந்து சீரகம் வெந்தயம் தாளிப்பதற்கு தலா 1 டேபிள்ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  8. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  9. குழம்பு மசாலா தூள் 2 டேபிள்ஸ்பூன்
  10. புளி கரைசல் 1 கப்
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணை தேவையான அளவு
  13. முட்டை ஆம்லெட் செய்வதற்கு தேவையான பொருட்கள்
  14. முட்டை 3
  15. வெங்காயம் 6
  16. பெப்பர் தூள் 3 டேபிள்ஸ்பூன்
  17. கொத்தமல்லி இலை 1 பின்ச்
  18. உப்பு தேவையான அளவு
  19. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குழம்பு செய்வதற்கு வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சீரகம் வெந்தயம் கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. நன்கு வதங்கியவுடன் தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும் பிறகு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் குழம்பு மசாலா தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்
  4. புளிக்கரைசல் ஊற்றி குழம்பை நன்கு கொதிக்க விடவும்
  5. குழம்பு கொதித்து கொண்டிருக்கும் வேலையில் ஆம்லெட் செய்யலாம்
  6. ஆம்லெட் செய்வதற்கு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  7. ஒரு பாத்திரத்தில் முட்டை நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி உப்பு பெப்பர் தூள் சேர்த்து நன்கு கலக்கிகக் கொள்ளவும்
  8. தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் ஆம்லெட்டாக ஊற்றி எண்ணெய் சேர்த்து இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுத்து துண்டுகளாக போட்டுக்கொள்ளவும்
  9. குழம்பு கொதித்து கொண்டிருக்கும் போது பீஸ் போட்ட ஆம்லெட் துண்டுகளை குழம்பில் சேர்த்து கொதிக்க விடவும்
  10. முட்டை ஆம்லேட் குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்