வீடு / சமையல் குறிப்பு / குழையாத கத்திரிக்காய் கறி

Photo of Bringal curry by Krishnasamy Vidya Valli at BetterButter
334
0
0.0(0)
0

குழையாத கத்திரிக்காய் கறி

Nov-28-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குழையாத கத்திரிக்காய் கறி செய்முறை பற்றி

கத்திரிக்காய் கறி செய்யும் போது அதிகமானவர்கள் ஒன்று குழைத்து விடுவார்கள் அல்லது சரியாக வேகாமல் இருக்கும். என் அம்மா குழையாமல் சரியான பருவத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு அதிகம் காரம் இல்லாமல் செய்வார்கள். இதோ அந்த ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வைலட் கத்திரிக்காய் 6 முதல் 8
  2. உப்பு 3/4 தேக்கரண்டி
  3. காரப்பொடி 1/2 தேக்கரண்டி
  4. சாம்பார் பொடி ரசப்பொடி தலா 1/8 தேக்கரண்டி
  5. கடலைமாவு 1 தேக்கரண்டி
  6. தாளிக்க
  7. தேங்காய் எண்ணெய் 3 தேக்கரண்டி
  8. கடுகு உளுத்தம் பருப்பு தலா ஒரு தேக்கரண்டி
  9. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  10. பெருங்காயம் 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. குழைவதற்கு முதல் காரணம் ஏற்கனவே நறுக்கி தண்ணீரில் போட்டு வைப்பதுதான். எனவே பாதி நறுக்கும் போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு தாளிக்கவும்.கடுகு வெடிக்க ஆகும் நேரத்தில் மீதி கத்திரிக்காயை நறுக்கவும். நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். நறுக்கியஉடனே கருக்காது. சிறிது நேரம் ஆனபின் தான் நிறம் மாறத்துவங்கும்.
  2. தொட்டுப்பார்த்தால் கத்திரிக்காய் பாதி வெந்து இருக்க வேண்டும். ஆனால் தோல் தனியாக வரும்வரை விடக்கூடாது.
  3. அந்த நேரத்தில் உப்பு காரப்பொடி சாம்பார் பொடி ரசப்பொடி சேர்த்து வதக்கவும்
  4. இறுதியாக கடலைமாவு தூவி இரண்டு நிமிடங்கள் வதக்கி அடுப்பை அணைத்து விடவும்
  5. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்